மழை நேர மாலை...


மழை பொழிய தொடங்கும் தருணம்
குடைபிடித்து தவிர்கிறேன்
துளிகளை...
பெய்யும் மழை
அழுக்கு தரை கழுவி கால் நனைக்க
திட்டிக்கொண்டும் அருவருத்துக்கொண்டும்
விலகிநகர்கிறேன்.
குடைதள்ளி விளையாட முனையும் காற்றை
ஜெயிக்கவிடாது தடுக்கிறேன்.
காத்திருப்புக்கு மத்தியில் வந்து சேர்க்கிறது பேருந்து
விரைவாக ஏறி இருக்கையில் அமர்ந்து
மூடிய ஜன்னல் வழியே பார்த்தால் தோன்றுகிறது
'அடடா! என்ன அழகு இந்த மழை'.

Comments

Popular posts from this blog

Traveling on one leg

கேள்விகளைத்தேடும் பதில்கள்!

The Shawshank Redemption