அன்னையை தேடி ....
விழிமுடிடும் போது வழி தேடிடும் கனவு
அலைபாயும் உன் நினைவு
எனக்குள்ளே -நீயின்றி
அனாதையாய் நகரும் என் பொழுதுகள்
நித்தமும்...
வேரை தேடும் பூவின் தேடல்
விதியை வெல்ல முடியாத பாடல்
பாடுகிறேன் நானும்
உன்னையே ...நாடி
என் அன்னையை தேடி ....
(விழிமுடிடும் )
உன் உயிரில் உதித்த உறவு நான்
என் ஜீவ தொடர்ச்சியில் முடிந்தவள் நீ
நிழல் தேடும் என் பிள்ளை நெஞ்சம்
நிஜம் இல்லை என் தாய் தான் என்றும்
நினைவுகளோடு கடக்கிறது காலம்
கனவுகளோடு தொலைகிறது நாளும்
வேரை தேடும் பூவின் தேடல்
விதியை வெல்ல முடியாத பாடல்
பாடுகிறேன் நானும்
உன்னையே ...நாடி
என் அன்னையை தேடி ....
(விழிமுடிடும் )
பனிக்குடம் உடைத்து கருவறை நனைத்து
உன் இடைபிளந்து பூமிக்கு வந்தேன்
வந்த வழிகள் தொலைந்திடவே
போகும் வழிகள் வலித்திடவே
தடுமாறி தடம் மாறி தவிக்கிறேன் நானே
அலை அழித்த கால் தடங்கள் பார்க்கமுடியுமா ?
கடந்து போன கணங்கள் திரும்ப முடியுமா ?
என் சுமை தாங்கிய சொந்தம் நீ
உன் பந்தம் சுடும் பனி
உன் ஜாடை பார்த்து ஏங்குகிறேன்
உன் அன்புக்காய் வாழ்கிறேன்
வேரை தேடும் பூவின் தேடல்
விதியை வெல்ல முடியாத பாடல்
பாடுகிறேன் நானும்
உன்னையே ...நாடி
என் அன்னையை தேடி ....
(விழிமுடிடும் )
Super..
ReplyDeletethank u ...:)
Delete