மழைவழிப்பயணம்

 


குடையோடு மழை
தொடர்கிறது வழியில்
என் தடம் மாறிய முதல் வழிபயணம்
மழையோடு தொடர்கிறது
இன்னும்...
வழியெங்கும் வலிகள்
இருந்தும் தொடர்கிறது என் மழை
கடக்க முடியாது கடந்த நொடிகள்
மன அடுக்குகளில் ...
அன்போடு கைப்பிடித்து நடைபழக்கி
ரசிந்த உள்ளங்கள்.
அவர்கள் விரல்பிடிக்க வழிவகுத்த காலம்
வேடிக்கை பார்க்க
தொடர்கிறது பயணம்
மகிழ்ந்து அழுது கரைந்து உணர்ந்து தெளிந்த
பயணத்தில் நான்
நாளை
இடம்மாறி தடம்மாறி போனாலும்
என்னை எனக்கே உணர்த்திய
இந்த மழை
நிழல் போல நினைவில்
என்றென்றும் தொடரும்
குடையோடு மழை
தொடர்கிறது வழியில்

Comments

Popular posts from this blog

Traveling on one leg

கேள்விகளைத்தேடும் பதில்கள்!

The Shawshank Redemption