தனிமையின் நிழல்

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் சித்தம் கரைக்கும் இசை...அழகு வரிகள்... கண்களை விட்டு அகலாத காட்சிகள்...இப்படி எதுவுமே இல்லாத இந்தபாடல் என்னுள் நிலைபெற்றது ஏன் என்றால் இப்பாடலில் இயல்பாய் வெளிப்படும் தனிமை தான் காரணம். தனிமை வெளிகளில் தன்னம்பிக்கையுடன் வாழ்வியலை எதிர்கொள்ளும் பெண்ணின் பாடல் இது! வரிகளில் வெளிப்படும் தனிமையை பாம்பே ஜெயஸ்ரீயின் அழுத்தமான குரல்,அழகாய் வெளிப்படுத்துகின்றது.கேட்கும் போதே மௌனவெளியில் ஒலிப்பதை போன்ற நினைவு... மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் அவசரம் எதுவுமே இன்று இல்லை ஒய்வெடுங்கள் தென்றல் தோழனை அழைத்து வந்து தேனீர் விருந்து கொடுத்து விட்டு வம்பு செய்தீர்கள் சுவைத்துக் கொண்டு சிரித்து முறைத்து விருப்பம் போல வாழ மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் அவசரம் எதுவுமே இன்று இல்லை ஒய்வெடுங்கள் மலர்களை நிம்மதியாக உறங்கசொல்பவள் அதன் சுகந்திரம் பற்றியும் உரிமை பற்றியும் உணர்த்துகிறாள். பூக்களின் அழகை மட்டுமே பாடும் உலகில் அதன் உரிமை பற்றி பாடும் பாடல் பெண் சிந்தனைகளின் மறுவடி...