சு ற்றுசூழல் என்றாலே நமக்கு முதலில் நினைவு வரும் விடயம் என்ன? இயற்கை சார்ந்த இடங்கள், அதன் முக்கியத்துவம், சூழலை மாசுப்படுத்தும் வாகனப்புகை , குப்பைகள் உட்பட பல விடயங்கள் நம் கண்முன்தோன்றும். இவற்றில், வீதிகளில் வீசப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு அந்த இடம் சுத்தமாக்கப்பட்டால் உடனே பிரச்சினை தீர்ந்தது என்று எண்ணுகின்றோம். ஆனால் நிஜம் வேறு! குப்பைகளின் அழிவில்லா ஆயுள் நமக்கு முதல் எதிரி. அன்றாடம் நம் வாழ்வில் பல்வேறுபட்ட பொருட்களை பயன்படுத்துகின்றோம். இவற்றில் நமது பயன்பாட்டை தவிர்த்து எத்தனையோ பொருட்கள் குப்பையாக மாற்றப்பட்டு வீசப்படுகின்றன. வீசப்படும் குப்பைகள் எங்கோ நிறைக்கப்பட்டு விதவிதமான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் சிந்தித்திருப்போமா? நமது இயந்திர வாழ்வை சற்று நிறுத்தி நம்மை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவாதனிக்க சொல்கின்றது இந்த Trashed ஆவணப்படம். Candida Brady இன் இயக்கத்தில் பிரபல நடிகர் Jeremy Irons நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான ஆவணத்திரைப்படம்தான் Trashed . குப்பைகளினால் உணவுச்சங்கிலியிலும் நீர், நிலம், காற்...