Komaali Kings

கோமாளி கிங்ஸ் திரைப்படத்தை திரையரங்கில் முதல்நாள் காணவேண்டும் என்று எண்ணியிருந்தேன். இயக்குனர் கிங்ரட்ணம் அவர்கள் ஊடக திரையிடலுக்கு வருமாறு அழைத்திருந்தார். அதனால் முன்னரே பார்க்க நேர்ந்தது. அதனடிப்படையில் சில விடயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். உலக நாடுகளின் திரைப்படங்களை பற்றி பேசுகின்றோம் எழுதுகின்றோம், இலங்கை தமிழ் படங்கள் என்று பெயர் கூறக்கூட முடியாதளவு இருக்கின்றோமே என்ற கவலை நமக்குள் உள்ளது. அந்த நிலையை மாற்ற சுயாதீன படங்கள் மட்டுமே தொழிற்பட்டு வந்த நிலையில், தொழிற்துறை சினிமாவை மீள் கட்டியெழுப்பும் விதமாக வெளியாகவுள்ளது கோமாளி கிங்ஸ் திரைப்படம். இலங்கையானது நில அமைவு , அரசியல் மற்றும் மக்கள் வாழ்வியலின் அடிப்படையில், சுயாதீன திரைப்படங்களுக்கான சிறந்த களமாக காணப்பட்டாலும், தமிழ் மக்களை பொறுத்தவரை சுயாதீன சினிமா மீதான தெளிவும் புரிதலும் இல்லாத நிலையில் தமிழக திரைப்படங்களின் வெற்றி, வணிகப்புகழ், அந்தஸ்து, நாயக விம்பம் என்பவற்றின் மீதான ஈர்ப்பும் பிரமிப்பும் கொண்டிருப்பதால் தொழிற்துறை சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பான்மையானவர்களிடம் காணப்படுகின்றது....