As we were dreaming

பெருங்கனவின் சிறுதுயரம்



It depends on your imagination
my thoughts are elsewhere


அரசியலும் உளவியலும் கூறுபோடுகிற 
வாழ்வியல் 
இவர்களுடையது....!


கிழக்கு ஜெர்மனியின் இளைஞர் குழுவின் இலக்கற்ற பயணமும் 
அவர்களின் வாழ்பனுபவங்களும் மாறிமாறி இடம்பெற்று 
மீளிணைவின்(German reunification) வரலாற்றை 
உணர்த்திக்கொண்டே இருக்கிறது.


Clemens Meyerஇன் நாவலுக்கு Andreas Dresenஇன் திரை வடிவம் .
படத்திலுள்ள இலக்கற்ற மனிதர்களின் கனவுகளின் கதைகளை 
கொஞ்சம் பிரித்தாலே 
பல நூறு குறும்படங்களிற்கு களம் காணலாம்.

நான், திரைமொழியின் அழகியலை ரசிப்பேன் என்றாலும் 
அதில் உள் இணைவது கொஞ்சம் குறைவுதான்.
எப்போதும் அழுக்கின் அழகைத்தான் 
மனம் விரும்புகிறது.
இங்கே ....நிலையற்ற கமராவின் விழிகளில் 
அகப்பட்ட இரவுகளில்... அழுக்கான குடியிருப்புக்களில்... 
நீண்ட தெருக்களில் ...
இன்னும் அலைந்துகொண்டிருகிறேன்.

நமக்குள் இருக்கும் 
சிக்கலான மனநிலையை 
வார்த்தைகளில் விபரித்து 
பேசிவிட்டாலோ எழுதிவிட்டாலோ 
புரிந்துவிடும்;கடந்துவிடலாம் என்று யார் சொன்னது ?
அருகிருப்புகளிலும் அன்பின் பரிமாற்றங்களிலும்
புரிதல்கள் நிகழ்வதே இல்லை.

அமைதியாக தியானம் செய்வதும் 
அனைத்தையும் அடித்து உடைப்பதும் 
ஒரேவிதமான மனநிலைதான்.

இருத்தலையும் வாழ்தலையும் உறுதிப்படுத்திக்கொள்ள 
ஒரு கனவு எப்போதும் தேவைப்படுகிறது.
அதன் மீதான பற்று மட்டுமே 
வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரச்செய்கிறது.

கனவுகளை புதுப்பிக்காமல் 
உதறித்தள்ளிவிட்டு 
இந்த தெருவின் அமைதியை குலைக்க 
கத்திவிட்டு வரவேண்டும்.

As we were dreaming (2015)
German

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery