அவளில் அவள்கள்

திரை-கதை-தொடர் -பகுதி 1 


அன்று -
கார்லோட்டா .
பேரழகி
வறுமையால் வாடிய அவளை ஒரு பணக்காரன் திருமணம் செய்துகொள்கிறான் .
காதலால் வாழ்க்கை அழகானதை எண்ணி மகிழ்கிறாள். 
 ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை .

ஒருநாள்
அவளது கணவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துசென்றுவிடுகிறான் .
குழந்தை பறிபோன ஏக்கத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு வருவோர் போவோரிடமெல்லாம் குழந்தையை கேட்டு கதறி அழுதவள்
தனிமையும் துயரும் தாங்காமல் ஒருநாள் மலையுச்சிக்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறாள் .

இன்று
Madeleine
தினமும் காலை வீட்டிலிருந்து கிளம்பி பூக்கடைக்கு சென்று அங்கு ஒரு பூச்செண்டை வாங்குகிறாள் .
அதன் பிறகு Carlottaவின் கல்லறைக்கு சென்று அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பவள்
அருகிலிருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்று Carlottaவின் படத்தை பார்த்துக்கொண்டே பல மணிநேரம் அமர்ந்திருப்பாள்.
கார்லோட்டா படத்தில் வைத்திருக்கும் பூக்கள்தான் மெடலின் கைகளிலும் இருக்கும் .
அதே போன்ற கூந்தல் அலங்காரத்தை செய்து அதே மாதிரி அமர்ந்துகொண்டிருப்பாள்
இது அவளது தினசரி வழக்கம் .

ஒரு திரைக்கதையின் மிகவும் சிறு பகுதி
எத்தனை எத்தனை திரைக்கதைகள் இதிலிருந்து பிறந்து விட்டன
நம்மில் Carlotta-Madeleineகள் உலவித்திரிகிறார்கள்.
ஒன்றின் உயிர்ப்பு.... இன்னொரு பிரசவம்
மெடலின்-ஜூடியை விட இந்த கார்லோட்டா என்னுள் எஞ்சுகிறாள்.
கெவின் தூக்கி எறியும் பெண்ணை பார்க்கையில் ஏனோ கார்லோட்டா மரணம் தற்கொலையா
என்பதில் கேள்வி வருகிறது.
ஓவியங்களும் பெரும்பாலும் உண்மை போல உயிர்ப்பெறுவதில்லை.

Vertigo

Comments

Popular posts from this blog

What time is it there?

Dyketactics