சட்டென நனைந்தது நெஞ்சம்



திரைப்பட வகுப்பறை ...
ஏதோ ஒரு பேச்சின் நீட்சியில் வந்தது 
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்பட பெயர்
அங்கிருந்த அனைவருமே
பிடிக்கவில்லை/ பிடித்த படம் என்ற வரையறைக்குள் அடக்கிட முனைந்த தருணம்
என் பட்டியல்களில் 
கன்னத்தில் முத்தமிட்டால் இல்லை என்றாலும்
படத்தில் இடம்பெறும்
கிட்டத்தட்ட 14 நிமிஷ காட்சியை அதில் ஒலிக்கும் பாடலை மட்டும் எப்போதும்
ரசிக்க தவறாதவள்

நான்

காதல்-
மணிரத்னம் தன் படத்தில்
அழகியல்- யதார்த்தம் என்று
2 பக்கங்களையும் இணைக்க முற்பட்ட கட்டம்.
மாதவன் எழுத்தாளன்
எழுத்தின் வழியே அவனை,
அவன் அழகை ரசிக்கும் சிம்ரன்.
ஈர்ப்பு -காதல்- அன்பு என்று எல்லாம் இருவருக்குள்ளும் மெலிதாய் இருக்கும் தருவாயில்
குழந்தைக்காக சிம்ரனை திருமணம் செய்ய மாதவன் கேட்க,
அது ஏன்? அப்படி ஒரு காரணம் ஏன்?
காதலை விட
காரணம்தான் தீர்மானித்ததா தன்னை,
என்று சிம்ரன் கேட்கும் காட்சி
எந்த வார்த்தையுமே அவளை சமாதனப்படுத்த முடியாதென்று உணர்பவன்
அவளது கோபத்தை, குழப்பத்தை கட்டியணைத்து
தீர்க்க முற்படுகையில்
அவளுக்கு சந்தோஷ வார்த்தைகள் கண்ணீராக உருமாறி தெறிக்க
முதன் முதலில் அந்த அருகாமையில்
அணைப்பின் ஆதிக்கத்தில் வெளிப்படும் அவள் உணர்வுகள்
பின்னணியில் ஒலிகிறது
இந்தப்பாடல்.....
அத்தனை நாள் காத்திருப்பின் பூர்த்தி
அந்த ஒற்றை நொடி.... அந்த அணைப்பு...
அவளின் சல்லி வேர்களை கூட
அறுத்து உயிர்ப்புக்கும் மரணத்துக்கும்
இடைப்பட்ட வெளியில் நிகழ்கிறது
அந்த காதலின் பூரணம்
அந்த வெளியெங்கும் காதல் நிரம்ப
மெல்ல எட்டிப்பார்க்கும்
காமத்தின் முகம்.
உதட்டில் நிறைந்த வெட்கத்தை அகற்றி
அணைப்பினாதிக்கத்தால் அச்சத்தை அகற்றகோருகிறது.
உயிரை தவிர அனைத்தையும் எடுக்க கெஞ்சும்
அவள், மீண்டுமொருமுறை
அந்த சந்தோஷக் கண்ணீரை
அந்த ஒற்றை நொடியை மீண்டும்
நிகழ ....
நிகழ்த்த....
கேட்கிறாள் .
எழுத்தின் வழியே ஆண் எப்போதும் எனக்கும் அழகன் தான்
அதுபோன்ற தருணத்தில்
நான் அவளான மாற்றம்
எழுத்தாளனின் காதல் என்பதால் ஒரு சிறுகதை போலவே இந்த பகுதியும்
அமைந்திருகிறது .
தொலைந்து போன மின்மினியின் குரல்
மீண்டு (ம் ) ஒலிகிறது
மணிரத்னத்தின் மேலோட்ட அரசியல் , திரைக்கதை தடம் மாற்றங்கள் ,
திணிக்கப்பட்ட வசனங்கள் என்ற விமர்சனப் பட்டியல்களை தாண்டி
படத்தில் எத்தனை பாடல்கள் இருந்தாலும்
ஏனோ இந்த பாடல் மட்டும்
எனக்குள்
எஞ்சுகிறது
மிஞ்சுகிறது
காரணம் அவள் காதலுக்கு நான் காதலி



சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்
சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்
உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய்......
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
சட்டென நனைந்தது நெஞ்சம்....


Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery