அவளில் அவள்கள்

திரை-கதை-தொடர் -பகுதி 1 அன்று - கார்லோட்டா . பேரழகி வறுமையால் வாடிய அவளை ஒரு பணக்காரன் திருமணம் செய்துகொள்கிறான் . காதலால் வாழ்க்கை அழகானதை எண்ணி மகிழ்கிறாள். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை . ஒருநாள் அவளது கணவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துசென்றுவிடுகிறான் . குழந்தை பறிபோன ஏக்கத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு வருவோர் போவோரிடமெல்லாம் குழந்தையை கேட்டு கதறி அழுதவள் தனிமையும் துயரும் தாங்காமல் ஒருநாள் மலையுச்சிக்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறாள் . இன்று Madeleine தினமும் காலை வீட்டிலிருந்து கிளம்பி பூக்கடைக்கு சென்று அங்கு ஒரு பூச்செண்டை வாங்குகிறாள் . அதன் பிறகு Carlottaவின் கல்லறைக்கு சென்று அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பவள் அருகிலிருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்று Carlottaவின் படத்தை பார்த்துக்கொண்டே பல மணிநேரம் அமர்ந்திருப்பாள். கார்லோட்டா படத்தில் வைத்திருக்கும் பூக்கள்தான் மெடலின் கைகளிலும் இருக்கும் . அதே போன்ற கூந்தல் அலங்காரத்தை செய்து அதே மாதிரி அமர்ந்துகொண்டிருப்பாள் இது அவளது தினசரி வழக்கம் . ஒரு திரைக்கதையின் மிக...