
UP வாழ்க்கை என்பது ஒரு பயணம். அந்த பயணம் சாகசங்கள் நிரம்பியதாக சராசரி வாழ்வில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்று நம்மில் பெரும்பாலானோர் ஆசைப்படுகிறோம் . மற்றவர்களிலிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக்காட்ட அல்லது தனித்து அடையாப்படுத்த நம் தோற்றம் ,இயல்பு ,குணம் ,வாழ்முறை என்று அனைத்தையும் மாற்றிக்கொள்ள முனைகிறோம் . அப்படி எல்லாம் அடைந்த பிறகு அதில் சந்தோசமும் நிம்மதியும் இருகிறதா என்றால் பெரும்பாலானோருக்கு இல்லை என்றே சொல்லலாம் .சராசரி வாழ்க்கையில் சந்திக்கும் அன்பு கலந்த அற்புத நிமிடங்கள் சாகச வாழ்க்கையில் கிடைப்பதில்லை .நமக்கிருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்க்கையில் அப்படிபட்ட சந்தோசங்கள் இல்லாத நிலை சில சமயம் வெறுமை தந்துவிடும் . உண்மையான அன்புடன் பிறருக்கு உதவும் சில சந்தர்ப்பங்கள் ,பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளும் இயல்பு வாழ்க்கை இது தான் உண்மை,1000 சாகசங்கள் ஈடாகாது அன்பின் சில நிமிட தருணங்களுக்கு என்பதை உணர்த்திய அற்புத திரைப்படம் தான் UP ...