
வன்புணர்ச்சி - இதுவும் ஒரு சம்பவம் !!! உடல் வன்முறை அதுவும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்களை ஒவ்வொரு முறையும் கடக்கும் போது வலிக்கும் . அந்த செயலை செய்த ஆண்கள் மீது கோபம் ஏற்படும். அந்த சம்பவத்தை நினைத்தாலே மனமெல்லாம் எரியும். உயிருள்ள பெண்ணை வெறும் சதையாக நினைக்கும் ஆண்களை கொல்ல வேண்டும் எனும் உணர்வு தோன்றும் . திரைப்படங்கள் பார்க்கும் போது கூட ஆண் அல்லது பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படும் காட்சிகளை என்னால் பார்க்க முடியாது அந்த காட்சியை பார்க்காது கடத்திவிட்டாலும் ஒரு பெரும் பாரம் மனதை அழுத்த தொடங்கிவிடும் சில நாட்களாவது ஆகும் அந்த சுவடு மறைய ...அடுத்த திரைப்படத்தில் லயிக்கும் வரை அதே நிலைதான் மீண்டும் ஒரு வன்முறை செயல் ...பெண் உடல் மீதான வதைபடலம் அரங்கேறியிருகிறது.வழக்கம் போல கோபமும் வெறுப்பும் வந்தது. ஆனால் இம்முறை எனக்கு அதீத கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிட்டது பாலியல் துன்புறுத்தலை செய்தவருடைய வாக்குமூலமும் அதை தொடர்ந்...