''உயிரே'' காதல் கதைகள்- பகுதி 1 நான் தேநீர் விரும்பியல்ல. தேநீர் போலவே எனக்கு காதலும் :) காதலின் இயல்பும் அதீதமும் அரிதாகவே என்னை கவர்ந்திருகின்றன. மணிரத்னம் படங்களில் வெளிப்படும் காதலின் அழகியல் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. மணிரத்னம் படங்களில் காதல் என்பது அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. வசனங்களில் ....காட்சிப்படுத்தலில் .... ஒளிப்பதிவில் ....இசையில் ....வரிகளில் என்று அதன் பிரிவுகள் மட்டுமே மாறிக்கொண்டிருகின்றன. தில்ஸே(உயிரே ) ஏன் இந்த படத்தைப்பற்றி அதிகம் பேசுவதில்லை என்ற கேள்வி அடிக்கடி எழும். உயிரேயின் அரசியல் தவிர்த்து அதன் காதல், அழகிய சிறுகதைகள். முதல் சிறுகதை உலகத்திலேயே மிகவும் சுருக்கமான காதல் கதை இது தான் என்று முடிகிறது. நான் ஆரம்பிக்கிறேன் :) மணிரத்னம் படங்களில் காதல் களங்கள் எவை ? ரயில்,மழை,காற்று,பரவசம், புன்னகை எல்லாம் இங்கிருக்கிறது. அமர் ஒரு சாதாரண இளைஞன். எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் தீர்வுகளை பற்றி சிந்திக்காதவன். எப்போதும் மகிழ்ச்சியும் தேடலும் ஆர்வமும் கொண்ட இளைஞனின் முகம் அன்றைய ஷாருக்கினுடையது. அசட்டை ந...
Comments
Post a Comment