ரம்புட்டான் எத்தனையோ பழங்கள் இருந்த போதும் ரம்புட்டான் மட்டும் வித்தியாசமானது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த பழம். ரம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த பழமரத்தாவரம். ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் , தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். அமெரிக்கா , மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது. இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இந்த மரங்கள் வளர்கின்றன. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம். இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பழத்தின் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். அதேபோன்று பழத்தின் விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதை பகுதியை மட்டுமே உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும் . July மாதம் இந்த பழ சீசன் ஆகும். அந்த நேரத்தில் மட்டு...
Popular posts from this blog
What time is it there?
பிறக்கும் போது தனித்தே பிறக்கிறோம் இறக்கும் போதும் தனித்தே இறக்கிறோம் ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்வில் யாரும் இல்லாத தனிமையும் வெறுமையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாத வலி தான் ... பிறந்தவுடன் குழந்தை தன்னை நோக்கி வரும் விரல்களை பற்றி பிடித்துகொள்ளும் அது போல வாழ்நாள் முழுக்க யாரோ ஒருவரின் (அல்லது சிலரின் ) பிரியங்களுக்காகவும் துணைக்காகவும் ஏங்கித்தவிக்கிறோம் யாருமில்லாத நிலையில் நகராத வாழ்வும் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நிழல் போல தொடரும் மனத்தனிமையும் உணரும் மனிதர்களின் வலியை எப்போதும் பிறரால் உணரமுடியாது ... அப்படிப்பட்ட மனிதர்களின் தவிர்க்க முடியாத தனிமையை திரைமொழியில் தந்த படம் தான் What time is it there? கேங் தந்தையின் திடீர் மரணத்துக்கு பிறகு இரவுகளில் பயம் கலந்த தனிமையை உணர்கிறான் .தூக்கம் வராது விழித்திருந்து பின்னிரவுகளில் உறங்குகிறான் . கடிகாரங்களை விற்பனை செய்யும் அவன் வாழ்வில் நேரத்தை கடத்த துணையாக யாருமில்லை . வேலை,வீடு தவிர்த்து அவன் உலகத்தில் எதுவுமில்லை யாருமில்லை . ஒரு நாள் கேங்கிடம...
Dyketactics
பெண்ணின் நிர்வாணம் என்ன செய்யும் ? பதட்டத்தை, பயத்தை, அருவருப்பை,ஆசையை, கிளர்ச்சியை, காம உணர்வினை ....இன்னும் ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறுவிதமான உணர்வுகளை தரக்கூடும். நிஜத்தில் உடல் என்பது உணர்வுகள் கொண்ட சதைப்பிண்டம். உயிருள்ளவரை நம்மை சுமந்து திரிய அதை பராமரிக்க வேண்டிய கடமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நம் உடல் மீதான மறைவுணர்ச்சி செயற்பாடுகளை நிகழ்த்தவே நம் சமுகமும் குடும்ப அமைப்புகளும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன எனலாம். நம் உடலை நாமே நிர்வாணமாக தனிமையில் மட்டுமே காணும் சூழலும் நிர்வாணம் மீதான ஒழுக்க கற்பிதங்களும் அச்சங்களும் வன்முறைகளும் திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அடக்குமுறை கட்டமைப்புக்களே இங்கு அதிகம் உள்ளன. ஒருகட்டத்தில் அந்த இறுக்கமான கட்டமைப்பின் மீதான வெறுப்பின் எதிர்வினையை நிகழ்த்த நிர்வாண உடலை ஆயுதமாக்கும் மனநிலையும் அதனால்தான் எழுகின்றது. இப்படி நிர்வாண உடல் பற்றி ஆயிரம் கதைகள் பேசினாலும் உடலை முன்வைத்து உருவாக்கப்படும் கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவே இல்லை. இந்த முடிவற்ற முரண்பாடுகளே Barbara Hammer இன் Dyketactics படைப்புலகம்! Barbara Hammer,...
Comments
Post a Comment