
பறக்கிறது இந்தக் காட்டையும் விட்டு தன்னந்தனியே நிற்கின்றேன் நான் தலைக்கு மேலே தெரியும் வானம் என் மனதைப்போல முற்றிலும் வெறுமையாய் ... காலணிகளை துறந்து வெற்றுக்கால்களில் நிற்கின்றேன் நான் காய்ந்து போய் குத்தும் மணல்கள் வலிக்கிறது இதயத்தில் .... என் இயலாமையில் நிறையும் வாழ்க்கை நிரப்பபடாத இந்த கானகத்தில் ? என தேடி அலைகின்றேன் நான் .... நான் தேடி அலைவது என்னை எனக்கான அடையாளத்தை அடைவேனா என்னை ? நரமயமாக்களில்... தாராளமயமாக்கலில் ... உலகமயமாக்களில் ... ஆட்பட்டு போன உங்களுக்கு காடு என்பதன் பொருள் என்ன ? வெறும் மரம் சூழ்ந்த பகுதியல்ல காடுகள் பயங்கர விலங்குகள் நிறைந்த இடமோ வாழத்தகுதியற்ற உறைவிடமோ அல்ல காடுகள் ... பல்லாயிரம் வருடமாய் செழித்து நெடிந்துயர்ந்து வான்தொட்டு நிற்கும் மரங்களும் செடிகொடி தாவரங்களும் இருவாச்சிகள் இரவாடிகள் இறைச்சி உண்ணிகள் பெரிய காட்டுயிர்களும் புழு பூச்சிகள் பறவைகள் நீருயிர்கள் என இயற்கை கூறுகள் அனைத்தும் இணைந்த எண்ணற்ற உயிரினங்களின் வாழ்வாதரமான அற்புத கட்டமைப்பே காடு அதுவே எங்கள் வீடு காடு அது தனி உலகம் உயிரோட்டமாய் வ...