திரை ஓவியன் -Gaspar Noé


சமிப காலமாக இயக்குனர் Gaspar Noéவின் படங்களை பற்றி பலரும் பதிவிடுகின்றனர். 
சில வருடங்களுக்கு முன்னர் Gaspar Noéவின் படங்களை 
திரைக்கதைபற்றிய சுய கற்றலில் அவரை பற்றி எழுதி சிறு ஆய்வு செய்திருக்கிறேன். 
ஓவியம் பற்றி முழுமையாக தெரியாததால் அப்படியே வைத்துவிட்டு வேறு படத்தில் மூழ்கி விட்டேன். 

இயக்குனர் Gaspar Noéஇன் படங்களை பலரும் பார்த்தாலும்
அதில் உள்ள காமத்தை மட்டுமே வைத்து பேச முற்படுகின்றனர்.
இன்றைய சூழலில் காமம் பற்றி பேசுவதும் எழுதுவதும் அதிகரித்திருப்பதால்
தங்களது கருத்துக்களுக்கு இவருடைய படங்களையும் துணைக்கழைப்பது நடந்துவருகிறது. 
அது வெறும் அறிமுக நிலை தான் !
அதை தாண்டி நாம் செல்ல வேண்டியது முக்கியம். 
அதுதான் படைப்பாளி பற்றிய புரிதலை விதைக்கும் .

ஆர்ஜென்டினாவின் கலை இலக்கியத்தில் 
''புதிய அடையாளத்தினை '' நிறுவியவர்களில் முக்கியமான ஓவியர்,எழுத்தாளர் Luis Felipe Noé.
அவரின் மகன் தான் Gaspar Noé.
Expressionism பற்றி தேடும் போது நிச்சயம் இவரை பற்றி அறிவீர்கள். 
Luis Felipe Noéவின் ஓவியத்தில் கையாண்ட intellectual ஆளுமையும் தேடலும் அதீதமானது.
Neofiguration ஓவியங்கள் தடைசெய்யப்பட்ட பின்னர், அவர் இடம்பெயர்ந்தார்.
Luis Felipe Noéவின் படைப்பு தொடர்ச்சி Gaspar Noéவில் சற்றே மாறுபட்டு வெளிப்படுகின்றது.

ஓவியத்தில் தந்தை கையாண்ட Expressivism என்பதன் இன்னொரு நீட்சியை மகன் ஒளிஓவியத்தில் கையாள்கிறார் எனலாம்.
இயக்குனர் Stanley Kubrick அவரது ஆதர்ஷ இயக்குனர் என்பது குறிப்படத்தக்கது. 
''பரிசோதனை முயற்சி'' என்ற வார்த்தைக்குள் அனைத்து தேடல்களையும் அடைத்துவிடுகிறோம். 
Stanley Kubrickஇன் தேடலை அப்படி அடையாளப்படுத்த மறந்தது /முடியாமல் போனதைப் போலவே பல இயக்குனர்களையும் நாம் வட்டத்துக்குள் அடைத்து வைத்து படைப்புகளை காண்கிறோம் .
Gaspar Noéஇன் படங்களை காமம் பற்றிய கட்டுபாடுகளை உடைகிறது என்று கூறுகிறோம்.அது முழுமையான புரிதல் அல்ல .
Gaspar Noéஇன் குறும்படங்களையும் பாருங்கள் 
இன்னுமொரு களத்துக்கு உங்களை அழைத்துசெல்லும் .

காமம் பற்றிய களம் என்ற மையத்தில் நகரவில்லை அவருடைய படங்கள் .
அதைத்தாண்டிய கலை மற்றும் உளவியல் தேடல் அதில் உள்ளது. 
ஒரு ஓவியனின் தூரிகையின் அசைவுகளுக்கு ஏற்ப ஒளியில் ஓவியத்தை கையாள்கிறார் .
அங்கே விதிகளும் இல்லை விதி மீறல்களும் இல்லை.
அவரின் ஆத்ம தேடலை சரியாக அடையாளம் காண்பதும் அதை அணுகுவதும் அதற்குரிய மரியாதையை கொடுப்பதும் நமது கடமை !

Gasper Noe
Seul contre tous I_Stand_Alone
Irreversible Irreversible
Enter The Void Enter the Void - Il Film
Love (2015 film)
Carne Compartida - Short Film
Sodomites

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery