As we were dreaming

பெருங்கனவின் சிறுதுயரம் It depends on your imagination my thoughts are elsewhere அரசியலும் உளவியலும் கூறுபோடுகிற வாழ்வியல் இவர்களுடையது....! கிழக்கு ஜெர்மனியின் இளைஞர் குழுவின் இலக்கற்ற பயணமும் அவர்களின் வாழ்பனுபவங்களும் மாறிமாறி இடம்பெற்று மீளிணைவின்(German reunification) வரலாற்றை உணர்த்திக்கொண்டே இருக்கிறது. Clemens Meyerஇன் நாவலுக்கு Andreas Dresenஇன் திரை வடிவம் . படத்திலுள்ள இலக்கற்ற மனிதர்களின் கனவுகளின் கதைகளை கொஞ்சம் பிரித்தாலே பல நூறு குறும்படங்களிற்கு களம் காணலாம். நான், திரைமொழியின் அழகியலை ரசிப்பேன் என்றாலும் அதில் உள் இணைவது கொஞ்சம் குறைவுதான். எப்போதும் அழுக்கின் அழகைத்தான் மனம் விரும்புகிறது. இங்கே ....நிலையற்ற கமராவின் விழிகளில் அகப்பட்ட இரவுகளில்... அழுக்கான குடியிருப்புக்களில்... நீண்ட தெருக்களில் ... இன்னும் அலைந்துகொண்டிருகிறேன். நமக்குள் இருக்கும் சிக்கலான மனநிலையை வார்த்தைகளில் விபரித்து பேசிவிட்டாலோ எழுதிவிட...