
பெண் சமத்துவம் ? ''மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? அப்படி என்ன உங்களுக்கு உரிமை இல்லை பாரதி காலத்தில் உரிமை இல்லை என்று போராடினால் அது நியாயம் அன்று பெண்கள் அடிமையாக இருந்தார்கள் இன்று உங்களுக்கு என்ன குறை? படிக்க முடியும் வேலைக்கு போக முடியும் விரும்பியபடி பணம் உடை வாழ்க்கைமுறை வசதி வாய்ப்புக்கள் எல்லாம் இருக்கிறது உடன்கட்டை முறை கூட இல்லை எப்படி எல்லா கொடுமைகளும் ஒழிந்தாயிற்று இன்னும் என்ன உரிமை வேண்டும் ? அடக்குமுறை அடக்குமுறை என்று கூப்பாடு போடுகின்றிர்கள் பெண்ணியம் பேசுவது இப்ப ஒரு fashion எப்ப பார்த்தாலும் ஆண்களை குறை சொல்லிக்கொண்டு .....'' இப்படி தொடர்கிறது சிலரின் அங்கலாய்ப்பு .... இந்த வாரத்தைகளை கேட்ட போது எனக்கு கோபமே வரவில்லை .காரணம் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று சிந்திப்பது பெரிய விடயம் அந்த சிந்தையை வரவேற்கிறேன் முதலில் ஒருவிடயத்தை பதிவு செய்ய நினைக்கிறன் ஆண்கள் எல்லோரும் தவறானவர்கள் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் கூறவில்லை இருவரும் மனிதர்கள் சரியும் தவறும் கொண்ட சராசரி வாழ்வை கொண்டவர்கள் தான் நாங்கள் ஆண்கள் தவறானவர்கள் அல்ல ....என் வ...