Innocent step




வெற்றிகள்,பாராட்டுக்கள்  தரும் சந்தோஷம் அலாதியானது.மனமும் மூளையும் சிலிர்த்து மகிழும் தருணம் அனுபவிக்கும் போது தான் உணரமுடியும் .அந்த அனுபவம் நாம் ஜெயிக்கும் போது மட்டும் ஏற்படுமா ? இல்லை.
 அடுத்தவரை ஜெயிக்க வைத்து பார்க்கும் போது, அதைவிட அதிக சந்தோஷத்தை ஏற்படுத்தும். ஆழ்மனதில் ஒரு திருப்தியும் பெருமையும் குடிகொள்ளும் . அந்த அடுத்தவர் நம் நேசத்துக்குரியவராக இருந்தால் ...
 "Success can not bring you happiness if the one you love is far away".அவரின் பிரியம் நமதானால் அவரின் வெற்றியும் நமதே என்று சொல்கிறது Innocent Steps


ரசிகர்களின் கைதட்டல் சத்தத்துக்கும் விளக்குகளின் வண்ண ஒளிக்கும் இடையில் நடனமாடிக்கொண்டிருகிறார்கள் கலைஞர்கள்.
Na Young-sae அந்த  கலைஞர்களில் ஒருவன் .Hyun-soo அவனுடைய போட்டியாளர்.
Hyun-soo, Na  மீதான பொறாமையால் அவனை தள்ளிவிட்டு காலை உடைகிறான்.அந்த வலியும் தோல்வியும் Naவின் நடனத்தை நிரந்தரமாக நிறுத்துகின்றன .

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நடனப்போட்டியில் Na வை  மீண்டும்
ஆடச்சொல்லி வற்புறுத்துகிறான்  Ma Sang-doo ( manager)
Naவுடன் இணைந்து ஆட சீனாவிலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வருகிறார் அந்த பெண் தான் Jang Chae-rin.
இருவருக்கும் குடியுரிமை பிரச்சனையால் போலித் திருமணம் நடைபெறுகிறது .இந்த சந்தர்ப்பத்தில் ஒரு உண்மையை சொல்கிறாள்Jang
தனக்கு நடனமே தெரியாது என்றும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பொய் உரைத்து விட்டதாகவும் கூறுகிறாள் .

தான் செலவழித்தது வீணாயிற்றே என்ற கோபத்தில் Jangஐ அடித்து  துரத்துகிறான்  manager Ma Sang-doo.
முதலில் கோபப்பட்டாலும் பின்னர் மனம் கேட்காமல் Jangஐ அழைத்துவரும் Na , அவள் விரும்பியபடியே நடனம் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறான். 
இதே நேரத்தில் இவர்கள் போலி தம்பதியினர் என்பதை நிரூபிக்க இவர்கள் பின்னாலேயே சுற்றி அலைகிறார்கள் 2 அதிகாரிகள் .

நடனம் தெரியாத Jang, கற்றுக்கொள்ள ரொம்பவும் சிரமப்படுகிறாள்.
Na வின் நண்பன் மூலமாக அவனது வாழ்க்கை பற்றி தெரிய வருகிறது Jang கிற்கு.
பேரும் புகழும் கொண்ட Na விற்கு எல்லாமே நடனம் தான் .
அவனால் பயிற்றுவிக்கப்பட்ட நேசத்துக்குரிய பெண் எதிரணியில் போய் இணைந்து கொள்ள Na வுக்கு முதல் தோல்வி ஏற்படுகிறது .நடன அரங்கில் ஏற்படுத்தப்பட்ட விபத்து Na வை முழுவதுமாக முடக்கிவிட்டது. இந்த தேசிய நடனப் போட்டி தான் Na வை பழைய நிலைக்கு கொண்டுவரப் போகும் வாய்ப்பு என்பதை அறிந்து கொள்ளும் Jang   அவனுக்காக ஆட ஆரம்பிக்கிறாள் .விருப்பத்தோடு வெறித்தனமாக நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள் .
Na வின் அன்பிலும் அக்கறையிலும்  நெகிழ்கிறாள் Jang 
அப்பாவித்தனமும் நேசமும் கொண்ட Jang மீது விருப்பம் கொள்கிறான் Na .
நடனத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் இதயத்துடிப்பு போல  அதிகரிக்கிறது  இருவருக்குள்ளும் இருக்கும் புரிந்துணர்வுடன் கூடிய காதல் .  


மீண்டும் Na ஆட வரப்போகிறான் என்பதை அறிந்து கொள்ளும் Hyun-soo பழிவாங்கும் முகமாக manager உடன் சேர்ந்து சூழ்ச்சி செய்கிறான் .Jang கின் நடன உரிமையாளர் manager Ma Sang-doo என்பதால் அவருக்கு Jang யாருடன் நடனமாட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழு உரிமையும் இருக்கிறது .
இதனால் Jang,  Hyun-soo உடன் நடனமாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது .
துணை இல்லாததால் Na வுக்கு போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது.

 இத்தனை நாள் அன்போடு கற்று தந்த Na வை விட்டுவிட்டு  Hyun-soo வுடன் சேர்ந்து ஆடவேண்டிய நிலையில் Jang என்ன முடிவு எடுத்தாள் ? அந்த நடனப்போட்டி  எப்படி நடந்தது? இருவருக்குள்ளும் இருக்கும் அந்த சொல்லப்படாத காதலின்  கதி என்ன ?
இந்த கேள்விகளுக்கு விடை காண்க திரையில் .....



கொரிய காதல் படங்களுள் இந்த படமும் ஒன்று; வழக்கமான காதல் காட்சிகள் இந்த படத்திலும் இருக்கின்றன ஆனாலும் ரசிக்கலாம் .
பனி  வீ சும் சாலையில் காலில் அடிபட்ட Jang ஐ Na குழந்தையைப் போல உப்புமூட்டை சுமந்து வரும் காட்சி இருவரும் பேசும் வசனங்கள்  ,
தொட்டு ஆட கூச்சப்படும் jang ஐ தன் இதயத்தில் கை வைத்து காதலுடன் நடனமாட சொல்லி உணர்த்தும் கட்டம் ,எப்போதும் sir  என்று அழைக்கும் Jang எல்லோர் மத்தியிலும் honey என்று அழைக்க  வெட்கப்பட்டுக்கொண்டே Na விலகி ஓடும் இடம் ,தான் வளர்க்கும் மின்மிகள் பற்றி புன்னகையும் லேசான கண்ணீருமாய் Jang விபரிக்கும் காட்சி,
முதன் முதலாக இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட திருமணப் புகைப்படத்தை பார்த்து ஒருவருக்கொருவர் தெரியாமல் ரசிப்பது ,விசாரணைக்காக இருவரும் இயற்றும் பொய் காதல் கதை,
நடனமாடி களைத்து போன Jang இன் கால்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் 
Naவிடம் 'உங்க பழைய பார்ட்னருக்கும் இப்படி செய்து விடுவீங்களா ?'என்று கேட்பதும் 'எனக்கு இப்பவும் எப்பவும் நீதான் பார்ட்னர்' என்று அழுத்தமாக Na சொல்ல Jang சிந்தும் பரவச புன்னகை கொள்ளை அழகு  

இயலாமையில் கிழித்து போட்ட திருமண புகைப்படத்தை திரும்ப ஒட்டி வைத்திருப்பதும் பிறந்த நாள் பரிசாய் Jang கேட்ட 20 ரோஜா பூக்களுடன் காத்திருப்பதும் இருவரும் விசாரணையின் போது ஒருவரைப் பற்றி ஒருவர் அன்பு வழியப் பேசும் வார்த்தைகள்
மின்மினிகள் மத்தியில் அன்பை வெளிபடுத்தும் இறுதி நிமிடங்கள்  
இப்படி இதமான இசைக்கு ஏற்ற மெல்லிய நடன அசைவுகள் போல நகர்கிற காட்சிகள் 
நிச்சயம் ரசிக்கலாம் ...

அற்புதமான கதை ,சுவாரஸ்யமான திரைக்கதை ,விறுவிறுப்பான காட்சிகள் 
இவை எதுவுமே இல்லாத திரைப்படம் தான் இது .
மிகப்பெரிய பூந்தோட்டத்தின் பூக்களின் அணிவகுப்பிலும் வாசனையிலும்  மனதை பறிகொடுப்பவர்கள் சிலசமயம் சாலையோரம் கொட்டிக் கிடக்கும் பூக்களை ரசித்துக் கொண்டே கடப்பது போல தான் இந்த படம்  எனக்கு ...
தெருவோரத்தில் இருக்கும் பெயர் தெரியாத பூக்களின் வாசத்தை போல Innocent Steps நம்மை ரசிக்க வைக்கும் 

Comments

Post a Comment

Popular posts from this blog

The Clue:4th Period Mystery