பரவல்




பற்றிப்பிடிக்கும் உன் கொடிய கரங்கள்
காயப்படுத்துகிறது என் தேகத்தை
படரும் உன் வேதனை தரும் ஸ்பரிசம்
என் பவித்ரங்களை உடைக்கிறது
மெல்ல மெல்ல பாவக்குழிகளில்
என்னை அமிழ்த்தி ரசிக்கிறாய்
வலிகள் தாளாது அன்பை அறுத்து அழும் போது
உன் குரோதக்கண்களின் புன்னகை விரிகிறது
கூரிய பற்களின் பிடியில் தவிக்கிறேன் நான்
உன்னை தவிர்க்கவும் தடுக்கவும் திராணியற்று
விழுகின்றேன் நித்தமும்
உனக்குள்ளேயே ...

Comments

Popular posts from this blog

மறைமுக பிரச்சாரமும் மாற்றுத்தேர்வும்