Fairway Galle Literary Festival - 2019

காலி இலக்கிய திருவிழாவிற்கு சென்றிருந்தேன். 15 ஆண்டுகளுக்கு பின்னரான காலி பயணம் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. காலி எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று. காரணம் அந்த கடலோசை. இலங்கையின் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கு சென்று அதன் ஓசையில் லயிப்பது பிடிக்கும். காலியின் கடலோசை எனக்குள் வெறுமையும் அமைதியும் கலந்த உணர்வை தோற்றுவிக்கும். அதனால்தான் அதிகம் பிடிக்கும். கடலும் கோட்டைகளும் பழைமையான கட்டிடங்களும் இணைந்து தனித்துவமான அழகை காலிநகரம் வெளிப்படுத்தியது. ஏதோ வெளிநாட்டு நகரமோ என்று நினைக்குமளவு வெளிநாட்டவர்கள் நிறைந்திருந்தனர். அதனால் ஆட்டோ விலை உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மூன்றுமடங்காக காணப்பட்டது. சிங்கள இலக்கிய விழாவில் கவிதை இலக்கியம் பற்றிய பகுதியில் சுவாரஸ்யமான கவிதைகளை கேட்கமுடிந்தது. அது முடிய கோட்டையை நோக்கி சென்றோம். ஓவியங்கள் வரைவதற்கான செயலமர்வும் கண்காட்சியும் எமது நேரத்தை பயனுள்ளதாக மாற்றின. வயது வித்தியாசமின்றி மிக ஆர்வமாக அனைவரும் வரைந்தனர். வரைதல் கொடுத்த மகிழ்ச்சியையும் அவர்களது கைகளையும் நான் அமைதியாக ரசித்து க...