Mubi

சினிமாவை எப்போதும் பெரிய திரையில், திரையரங்கின் சூழலுடன் காண்பதே காண்பியலின் பூரணத்தை அளிக்கும். உலகத்திரைப்படங்களை திரையிடுவதற்கென்று பிரத்தியேகமான திரையரங்குகள் இல்லாத சூழலில் அத்தகைய திரைப்படங்களை காணும் வாய்ப்புக்கள் நமக்கு மிகவும் குறைவு. திரைப்பட விழாக்கள், திரையிடல்களில் மட்டுமே பெரிய திரையில் உலகப்படங்களை பார்க்கும் வாய்ப்புக்கள் கிடைகின்றன. திரைப்பட விழாக்களும் திரையிடல்களும் நம் மத்தியில் மிகக் குறைவாக இடம்பெறும் விடயம் என்பதால் உலகப்படங்களை பார்ப்பதற்கு DVDக்களும் இணையமும் இலகுவான வழிகளாக காணப்படுகின்றன. இணையத்தில் torrentலும் Youtubeலும் படம் பார்க்கும் நமக்கு அனைத்துப் படங்களும் கிடைப்பதில்லை. சில நேரங்களில் அதன் தரத்திலும் குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. அத்தோடு தனிப்பட்ட முறையில் இலவசங்களிலும் இரவல்களிலும் எனக்கு விருப்பமில்லை. கட்டணம் செலுத்திப்பார்ப்பது, பணம் கொடுத்து DVDகளை வாங்குவது அந்த படைப்பின் உழைப்புக்கான மரியாதையை செலுத்துதல் என்று கருதுவதோடு அதில் மனத்திருப்தியை உணர்கின்றேன். torrent,Youtube இரண்டையும் கொஞ்சம...