ஸ்பரிசம்

The Handmaiden-சில திரைக்கதைகள் நம் கதையை நியாபகப்படுத்தும் நான் எழுதிய சிறுகதையை நினைவூட்டுகிறது இக்கதையின் ஒரு பகுதி எனக்கு அதிகபட்சம் 15 வயதிருக்கும். அப்பொழுது வெளிப்பாடசாலை சிறுகதைப்போட்டி தலைப்பின் கீழ் எழுதுவது எனக்கு பிடிக்காது அந்த நேர மனநிலையில் ஏதோ ஒன்றை எழுதிவிட்டு 3வதாக இருக்கும் தலைப்பை கதைக்கு சூட்டுவது என் வழக்கம் அன்று விரும்பிய தலைப்பு என்ற அறிவிப்பு எதுவுமே திட்டமிடாத நிலையில் எழுத ஆரம்பிக்கிறேன் கதை -ஸ்பரிசம் இரு பெரிய மரத்தடுப்புக்கள் வழியே சிறு துளை அதில் இருபுறமும் விரல்கள் மெல்ல ஒன்றை ஒன்று பற்றிக்கொள்கின்றன அந்த ஸ்பரிசத்தோடு ஆரம்பிக்கிறது கதை மலையுச்சி, பெரிய மாளிகை காட்டுவழியே வருகிறாள் ஒரு பெண் அவள்அந்த மாளிகைக்கு புதிதாக வரும் பணிப்பெண் அந்த மாளிகையின் எஜமான் பெரும் செல்வந்தன் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே அங்கு வந்து வசிப்பான் அவன் மனைவி பேரழகி இத்தனை தூரத்தில் அவளை பாதுகாக்கவே இந்த மலை அரண்மனை அந்த பேரழகிக்கு எப்போதும் ஓவியங்கள் வரைவதே வேலை எல்லாமே பார்த்து வரையும் ஓவியங்கள் சுய சிந்தையில் அவள் வரைந்ததே இல்லை வெளி உலகம் அறி...