காக்கா முட்டை

காக்கா முட்டை –நான் உணர்ந்ததை கொஞ்சம் பகிர்கிறேன் :) காக்கா முட்டை கதை நாயகர்களின் பெயர் இதுதான். 2 சிறுவர்கள் மூத்தவன் பெரிய காக்கா முட்டை, சிறியவன் சின்ன காக்கா முட்டை. புறநகர் பகுதியான சேரியில் ஒரு சிறு குடும்பம் .அந்த குடும்பத்தில் 2 சிறுவர்கள் . அப்பா சிறையில், அம்மாவும் அப்பத்தாவும் ஒரு குட்டி நாயும், சிறிய அறையில் குடும்பமாக வாழ்கிறார்கள் . பீட்சா கடை திறக்கப்படுகிறது.சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைபடுகிறார்கள் . தினமும் 1௦ ருபாய் சம்பாதிக்கும் சிறுவர்கள் எப்படி 300 ரூபாய் பீட்சாவை சாப்பிட்டார்கள் ? இதுதான் படத்தின் கதை. சிறுவர்கள் இருவரும் காக்கா முட்டை குடித்து வளர்கிறார்கள் .இதனால் அனைவரும் கேலி செய்கிறார்கள். தாய்திட்டும் போது,அப்பத்தா ”காக்காவும் பறவை தானே நம்ம கூடவே இருக்குது.முட்டை விக்குற வெலைல அதை வாங்க முடியுமா ?” என்று பேரன்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் .காக்கைகள் கூடு கட்டி வாழும் மரமும் மரம் சார்ந்த இடமும் திடிரென்று ஒருநாள் பூட்டப்படுகிறது. வியாபார ஸ்தலமாக மாறுவதால் மரம் அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு இறுதியில் மிகப்பெரி...