Spirited Away

கனவுகள் கற்பனைகள் என்பதன் ஆரம்ப புள்ளி எதுவாக இருக்கும் ? எனக்குள் எப்படி ஆரம்பித்தது இந்த கற்பனைகளின் பயணம் என்று அடிக்கடி யோசிப்பேன் .... பனி படர்ந்த கண்ணாடியில் தெரியும் முகத்தோற்றம் மாதிரி என் நினைவுகளில் நிழலாடுகிறது அந்த பால்யகால சம்பவங்கள் தாத்தாக்கள் பாட்டிகளிடம் கதை கேட்ட நாட்கள் அவை . அவர்கள் சொல்லச் சொல்ல அதை மனதில் காட்சிப்படுத்திக் கொள்வது என் வழக்கம் . பாட்டிகளின் உலகத்தோடு ஆரம்பித்த இந்த வழக்கம் எல்லோரிடமும் கதை கேட்கும் நச்சரிப்பாகவே மாறியது. ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு கதை இருக்கும்; பல சமயம் ஒரே கதை வெவ்வேறு விதத்தில் வெளிப்படும் . எதுவாக இருந்தாலும் எனக்கு கதைகள் ,அது தரும் கற்பனைகள், தனிமையை துரத்த தேவைப்பட்டது . காலப்போக்கில் பால்யம் தொலைய சினிமாவுக்குள் ஐக்கியமானேன். சினிமா தரும் கற்பனை உலகில் வசிக்க ஆரம்பித்த பிறகு கதைகளோடு வாழவே ஆரம்பித்து விட்டேன் . என்றோ கேட்ட கதைகளின் எச்சங்கள் இன்றைய பொழுதோடு சேர்ந்து கனவுகளில் துரத்தும் . அதை அரையுறக்கத்தில் ரசித்துக் கொண்டே உறங்கியும் உறங்காமலும் இரவை கழிப்பேன். இது என் வாழ்க...