
நீதிக்கு நெஞ்சோ நிகர் கவிபாட வேளை வந்தது திறந்திருந்த என் பேனையில் வார்த்தைகளைக் கொட்டி குவிக்கிறேன் கிறுக்கல்கள் கவியாகாது இது கிறுக்கச்சியின் உளறல்கள் கவியரங்கில் நீதிக்கு நெஞ்சோ நிகர் என்ன கவி சொல்வேன் இங்கு ? வருகிறான் ஒருவன் என் பக்கத்தில் நிற்க வைக்கிறார்கள் நிற்கிறான். கண்களில் சிந்தக் காத்திருக்கும் கண்ணீர் தளர்ந்து போன உடல் அமைதியும் பயமும் கொண்ட அவன் உள்ளம் பிரார்த்திக்கிறது சட்டென்று அவன் முகம் மறைத்து என்னை அவனுடன் இருகப் பிணைத்துவிட்டார் என் அதிகாரி. நேரம் பார்த்து அனுமதிக்க மெல்ல மெல்ல நான், அவன் கழுத்தை இறுக்கினேன் . என் முழு பலத்தையும் உபயோகித்து அவன் கழுத்து நரம்புகளை அறுத்தேன். சுவாசக்குழாய் நெரிபட்டு லேசான உடைவுடன் அவன் நாக்கு வெளித்தள்ள கண்கள் முழித்தள்ள மேலும் மேலும் இறுக்கி பிடித்தேன் வன்மம் பொங்க என் கடமையை தொடர்ந்தேன் அவன் துடித்தான் நான் இறுக்கி பிடித்து கழுத்தறுக்க சில நிமிட போராட்டங்க...