The Orphanage

The Orphanage வாழும் போது அன்பு பாசம் உறவுகள் இதெல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் .இறந்த பிறகு ? இறப்புக்கு பின்னர் வாழ்தல் இல்லையா ? அப்பொழுது அன்புக்கும் பாசத்துக்கும் இடமில்லையா ? உண்மையான அன்பு மரணத்துக்கு தயங்காது; மரணித்த பின்னரும் வாழ்தலை உறுதிபடுத்துவதும் அதே அன்புதான் இதை தான் The Orphanage வெளிபடுத்துகிறது கதாநாயகி லாரா .அநாதை சிறுமி .அநாதை இல்லத்தில் வளரும் அவளை ஒரு தம்பதி தத்தெடுகின்றனர். பல வருடங்களுக்கு பின்னர் லாரா தான் வளர்ந்த இல்லத்தை வாங்கி மீண்டும் ஆதரவு இல்லமாக மாற்ற முடிவு செய்கிறாள் . இதற்காக கணவர் கார்லோஸ் , குழந்தை சிமோன் ஆகியோருடன் அங்கு வாழ ஆரம்பிக்கிறாள் . சிமோன் அவ்வப்போது அவனது நண்பர்கள் பற்றி லாராவிடமும் கார்லோஸிடமும் சொல்வது லாராவுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சிமோனின் நண்பர்கள் யார் கண்ணுக்கும் புலப்படுவதில்லை .இதனால் மகன் சொல்லும் நண்பர்கள் நிஜமில்லை தனது தனிமையை போக்க இப்படி சொல்கிறான் என்று நினைகிறார்கள் ஒரு நாள். லாராவை சந்திக்க ஒரு வயதான பெண்மணி வருகிறாள் .சமுக ஆர்வலர் என்று தன்னை அ ட...