Innocent step
.jpg)
வெற்றிகள்,பாராட்டுக்கள் தரும் சந்தோஷம் அலாதியானது.மனமும் மூளையும் சிலிர்த்து மகிழும் தருணம் அனுபவிக்கும் போது தான் உணரமுடியும் .அந்த அனுபவம் நாம் ஜெயிக்கும் போது மட்டும் ஏற்படுமா ? இல்லை. அடுத்தவரை ஜெயிக்க வைத்து பார்க்கும் போது, அதைவிட அதிக சந்தோஷத்தை ஏற்படுத்தும். ஆழ்மனதில் ஒரு திருப்தியும் பெருமையும் குடிகொள்ளும் . அந்த அடுத்தவர் நம் நேசத்துக்குரியவராக இருந்தால் ... "Success can not bring you happiness if the one you love is far away". அவரின் பிரியம் நமதானால் அவரின் வெற்றியும் நமதே என்று சொல்கிறது Innocent Steps ரசிகர்களின் கைதட்டல் சத்தத்துக்கும் விளக்குகளின் வண்ண ஒளிக்கும் இடையில் நடனமாடிக்கொண்டிருகிறார்கள் கலைஞர்கள். Na Young-sae அந்த கலைஞர்களில் ஒருவன் . Hyun-soo அவனுடைய போட்டியாளர். Hyun-soo, Na மீதான பொறாமையால் அவனை தள்ளிவிட்டு காலை உடைகிறான்.அந்த வலியும் தோல்வியும் Naவின் நடனத்தை நிரந்தரமாக நிறுத்துகின்றன . நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நடனப்போட்டியில் Na வை மீண...