மருதாணியின் மகிமை இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது.பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர். மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைத்துள்ளது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. உறக்கமின்மைக்கு நாம் உறக்க மருந்துகளை பயன்படுத்துவது வழக்கம்.இது ஒரு தவறான பழக்கம் உறக்க மருந்துகளது பாவனையினால் நமக்கு நரம்பு தளர்ச்சி ஏற்ப்படும் .மனஅழுத்தம் உருவாகி நாளடைவில் புத்தி பேதலித்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் மருதாணியை பயன்படுத்தலாம் மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற...