நாயகவிம்பத்தின் சிதைவுகள்

நாயகன் என்ற கதாபாத்திரத்தூடாக விம்ப மேலாதிக்கம், தமிழ் சினிமாவில் நிறுவப்படுவதை பல ஆண்டுகள் பார்த்துவருகின்றோம் . இவ்வாறு கட்டமைக்கப்படும் ‘’நாயக விம்பம்’’ சினிமாவின் ஆன்மாவை சிதைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது . அத்தோடு சமூகத்தில் மழுங்கடிக்கப்பட்ட சிந்தனைகளை விதைப்பதையும் பாலின ஒடுக்குமுறைகளை எவ்வாறு தோற்றுவித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம் . மக்களுடைய ரசனையை மழுக்கடித்த பெருமை இத்தகைய சினிமாக்களுக்கே உண்டு. ‘சிந்தனைவளர்ச்சி’ என்பதை தடுப்பதோடு தொடர்ந்து சிதைத்தும் வந்திருகின்றன. அதற்கு எளிய உதாரணமாக உலக படங்களையும் உலக இயக்குனர்களையும் பார்க்கும் தற்கால சமுகம் அவர்களை கட்டவுட் வைத்து வரவேற்கும் நிலையும், தனக்கான அடையாளமாக இன்னாரின் ரசிகன் என்று அறிமுகமாவதைபோல இந்த உலக இயக்குனரின் ரசிகன் என்றே தன்னை அறிவுசார் வட்டத்தில் பொருத்த முனையும் மனநிலையூடாக அறிந்துகொள்ள முடியும். தலைவா, தலைவி என்ற பதங்களினூடாக உலக இயக்குனர்களை மட்டுமல்ல சக மனிதர்களின் செயலையும் விதந்து நோக்கும் மனநிலை மிகவும் ஆபத்தான தாழ்வு சிக்கலின் வெளிப்பாடு. சினிமா...