
மனப்பெட்டகம் எழுதப்படாத கவிதைகள் நிறைந்துபோன மனப்பெட்டகம் திறந்து மூடிக்கொண்டிருக்கிறது. அதன் சத்தங்கள் பொறுக்க முடியாத இம்சையாய்... பூட்டுக்கள் அடைத்து முழுவதுமாய் மூடி சாவி தொலைக்கதோன்றும் எண்ணங்கள். செய்ய துணிய மறுக்கிறது மனது... மூடுகையில் திறக்கவும் திறக்கையில் மூடவும் தோன்றுகிறது நித்தமும் திறப்பதும் மூடுவதுமாக தொடரும் மீண்டும் மீண்டும் தொலையும்வரை ...!!!