
உழைப்பாளர் தினம் வாழ்த்து சொல்றவங்களும் வசை பாடுறவங்களும் இரண்டு தரப்புமே தங்களோட கருத்தை சொல்றாங்க உழைக்கிற எங்களுக்கு எல்லா நாளுமே எங்க தினம் தான் என்ன தொழில் என்ன பதவி எவ்வளவு சம்பளம்னு பாகுபட்டோட தானே உழைப்பாளர்களை வரையறுக்கிறோம் ? இன்னைக்கு அதை மறந்தாலும் பாக்கி இருக்குற 364 நாட்களும் அதை யோசிக்கிறோம் தானே ? பணம்- பதவி அடிப்படைல தானே நம்ம உழைப்பு மதிக்கபடுது ? அந்த எண்ணத்துல இருந்து விடுபட்டவங்க நம்மில் எத்தனை பேர் ? சொல்லபோனா எனக்குளேயே அந்த மாற்றம் முழுமையா நிகழலை நான் அதிகம் ஆச்சர்யபடுறதும் மதிகிறதும் சாக்கடை பணியாளர்களை தான் . வறுமை அவர்களது பணிக்கு காரணமா இருந்தாலும் அதை செய்ய முனையுற தைரியமும் சமுகத்தால ஒதுக்கபடுவதை ஏற்றுகொள்ற நிலையும் அசாத்தியமானது நம்ம உடல் கழிவுகளை நாமே பார்த்து அருவருக்கும் போது அதை அப்புறப்படுத்தும் மனிதர்கள் எப்படிபட்ட மனிதர்கள் ? அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் ? கழிவுகளோட கழிவுகளாக அவங்கள புறக்கணிக்கிறதை தவிர்ப்போமே அவங்க இல்லாட்டி நாம வாழ வழி இருக்காது .... முதல்ல அவங்களை கௌரவிப்போம் குறைந்த பட்சம் ஒதுக்கமால் அவமரியாதைக்...