What time is it there?

பிறக்கும் போது தனித்தே பிறக்கிறோம் இறக்கும் போதும் தனித்தே இறக்கிறோம் ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்வில் யாரும் இல்லாத தனிமையும் வெறுமையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாத வலி தான் ... பிறந்தவுடன் குழந்தை தன்னை நோக்கி வரும் விரல்களை பற்றி பிடித்துகொள்ளும் அது போல வாழ்நாள் முழுக்க யாரோ ஒருவரின் (அல்லது சிலரின் ) பிரியங்களுக்காகவும் துணைக்காகவும் ஏங்கித்தவிக்கிறோம் யாருமில்லாத நிலையில் நகராத வாழ்வும் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நிழல் போல தொடரும் மனத்தனிமையும் உணரும் மனிதர்களின் வலியை எப்போதும் பிறரால் உணரமுடியாது ... அப்படிப்பட்ட மனிதர்களின் தவிர்க்க முடியாத தனிமையை திரைமொழியில் தந்த படம் தான் What time is it there? கேங் தந்தையின் திடீர் மரணத்துக்கு பிறகு இரவுகளில் பயம் கலந்த தனிமையை உணர்கிறான் .தூக்கம் வராது விழித்திருந்து பின்னிரவுகளில் உறங்குகிறான் . கடிகாரங்களை விற்பனை செய்யும் அவன் வாழ்வில் நேரத்தை கடத்த துணையாக யாருமில்லை . வேலை,வீடு தவிர்த்து அவன் உலகத்தில் எதுவுமில்லை யாருமில்லை . ஒரு நாள் கேங்கிடம...