
ஒப்பாரியோ உயிர்கொலையோ இல்லை இந்த படத்தில், ஆனால் ஆரம்பம் முதல் இறுதிவரை அழுதுகொண்டே இருந்தேன். மனம் வலித்துக் கொண்டே இருந்தது குற்ற உணர்ச்சியில்.... முதுமையின் மாற்றமுடியாத முகச்சுருக்கங்களைப்போல இந்த படமும் தவிர்க்கமுடியாத திரை உண்மை! படம் முடிந்ததும் நானும் என் நெஞ்சில் கைவைத்து மன்னிப்பு கேட்கிறேன் மானசீகமாய்... சிறுவயதில் என்னால் காயப்பட்ட பெரியவர்களிடமும் நகர் வாழ்க்கை பழக்கத்தால் வாழ (போக ) மறுத்த கிராமங்களிடமும்!