மருதாணியின் மகிமை
இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது.பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று.
மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைத்துள்ளது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.
உறக்கமின்மைக்கு நாம் உறக்க மருந்துகளை பயன்படுத்துவது வழக்கம்.இது ஒரு தவறான பழக்கம் உறக்க மருந்துகளது பாவனையினால் நமக்கு நரம்பு தளர்ச்சி ஏற்ப்படும் .மனஅழுத்தம் உருவாகி நாளடைவில் புத்தி பேதலித்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.
இந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் மருதாணியை பயன்படுத்தலாம் மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றிலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும் பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மருதாணியினை இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தான் வயது வித்தியாசமின்றி மருதாணி வைக்கும் வழக்கம் அக்காலத்திலிருந்து இன்று வரை தொடருகிறது.
மருதாணியின் தைலம் முடிவளர ஏற்றது. இதன் தைலத்தை ஒவ்வொரு நாளும் தலைக்கு தேய்க்க முடி வளருவதோடு இள நரை அகலும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. இந்த முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல வடிவங்களில் மருதாணி இட்டுக் கொண்டால் அது நலம் தரும் .
மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது இதனால் தான் நகசுத்தியை தடுக்க நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். நகங்கள் அழகாவதோடு நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது.
நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி காணப்படுவதால் நகக்கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் இரசாயன மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் உடனடியாக குணமாகும்.
நகசுத்தியை மட்டுமல்ல உடலில் உருவாகும் சகல புண்களையும் ஆற்றவும் நல்ல மருந்தாக மருதாணி பயன்படுகிறது ஆறாத வாய்ப்புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம் . அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.
கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி னால் 3-5 நாளில் புண்கள் குணமாகும் இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.
மருதாணி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும். கோடை வெயிலை தவிர்க்க உதவும் .
மருதாணியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருதாணிக்கு உண்டு.
மருதாணியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.
கை கால்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாவதை தடுக்க மருதாணி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.
பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதாணி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். அதேநேரம் இக்காலங்களில் உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் அப்பொழுது தான் முழுப்பலன் கிடைக்கும்.
மருதாணி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் இட்டால் விரைவில் குணமாகும்.
இப்படி எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டது மருதாணி தற்போது யாரும் அதிகமாக மருதாணியை பயன்படுத்துவதில்லை. ரெடிமேடாக செய்த மெகந்தியை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர். பவுடராக வரும் இந்த மருதாணியில்,அதன் மருத்துவ குணக்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டே வருகின்றது.
முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் அழகுடன் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
|
தென்கொரிய திரைப்பட விழா 2016 – இலங்கை
கடந்த 15 வருடங்களாக தென் கொரிய திரைப்படங்கள் கிழக்கு ஆசியாவை தாண்டி உலகெங்கும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் கடந்த 6ஆண்டுகளில் தென்கொரியத் திரைப்படங்களின் சர்வதேச விற்பனை, மீளாக்கம், திரைப்பட விருதுகளை பெறல், மொழிமாற்றம் செய்யப்படல் என்று அதன் தாக்கம் அதிகம் எனலாம். இலங்கையிலும் தென்கொரிய திரைப்படங்களுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதற்கு சாட்சி கடந்த வருடம் அரங்கு நிறைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட தென்கொரிய திரைப்பட விழா -2015. இலங்கையில் கடந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழாக்களுள் முக்கியமானது தென்கொரிய திரைப்பட விழா. ரசிகர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்தது எனலாம். ஆரம்பத்திரைப்படமான Harmonyக்கு திரையரங்கம் நிரம்பியது. இறுதியில் படத்தில் லயித்து போனவர்கள் கண்ணீருடன் தான் திரும்பினார்கள். Forever the Moment ரசிகர்களின் ஆதரவை பெற்றதோடு படம் முடிந்த பின்னர் அனைவரும் நீண்ட நேரம் கைதட்டி பாராட்டினார்கள். அதே போல A Barefoot Dre...
Comments
Post a Comment