என் சிறுமழை ...
ம் ...
நான் தனித்திருக்கின்றேன்....
நிலவிரவுகள் நகரும் நேரம்
நிலையின்றி ஓடும் மேகம்
நிமிடங்களோடு கடக்கும் நினைவுகள்
திமிரை தின்று தீர்த்த அனுபவங்கள்
வேதனைகளை கரைக்க முயன்று
தோற்றுப்போகிறேன் மீண்டும் மீண்டும்
எப்போதும்
பெருவெளிகளில் மௌனித்தே இருக்கின்றேன்
என் மௌனத்தின் மொழியாய்
உனக்கும் எனக்குமான இடைவெளியில்
பொழிகிறது என் சிறு மழை ...
Comments
Post a Comment