Posts

Showing posts with the label இலங்கை சினிமா

நாயகவிம்பத்தின் சிதைவுகள்

Image
நாயகன் என்ற கதாபாத்திரத்தூடாக விம்ப மேலாதிக்கம், தமிழ் சினிமாவில் நிறுவப்படுவதை பல ஆண்டுகள் பார்த்துவருகின்றோம் . இவ்வாறு கட்டமைக்கப்படும் ‘’நாயக விம்பம்’’ சினிமாவின் ஆன்மாவை சிதைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது . அத்தோடு சமூகத்தில் மழுங்கடிக்கப்பட்ட சிந்தனைகளை விதைப்பதையும் பாலின ஒடுக்குமுறைகளை எவ்வாறு தோற்றுவித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம் . மக்களுடைய ரசனையை மழுக்கடித்த பெருமை இத்தகைய சினிமாக்களுக்கே உண்டு. ‘சிந்தனைவளர்ச்சி’ என்பதை தடுப்பதோடு தொடர்ந்து சிதைத்தும் வந்திருகின்றன. அதற்கு எளிய உதாரணமாக உலக படங்களையும் உலக இயக்குனர்களையும் பார்க்கும் தற்கால சமுகம் அவர்களை கட்டவுட் வைத்து வரவேற்கும் நிலையும், தனக்கான அடையாளமாக இன்னாரின் ரசிகன் என்று அறிமுகமாவதைபோல இந்த உலக இயக்குனரின் ரசிகன் என்றே தன்னை அறிவுசார் வட்டத்தில் பொருத்த முனையும் மனநிலையூடாக அறிந்துகொள்ள முடியும். தலைவா, தலைவி என்ற பதங்களினூடாக உலக இயக்குனர்களை மட்டுமல்ல சக மனிதர்களின் செயலையும் விதந்து நோக்கும் மனநிலை மிகவும் ஆபத்தான தாழ்வு சிக்கலின் வெளிப்பாடு. சினிமா...

Fairway Galle Literary Festival - 2019

Image
காலி இலக்கிய திருவிழாவிற்கு  சென்றிருந்தேன். 15 ஆண்டுகளுக்கு பின்னரான காலி பயணம் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. காலி எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று. காரணம் அந்த கடலோசை. இலங்கையின் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கு சென்று அதன் ஓசையில் லயிப்பது பிடிக்கும். காலியின் கடலோசை எனக்குள் வெறுமையும் அமைதியும் கலந்த  உணர்வை தோற்றுவிக்கும். அதனால்தான் அதிகம் பிடிக்கும். கடலும் கோட்டைகளும் பழைமையான கட்டிடங்களும் இணைந்து  தனித்துவமான அழகை காலிநகரம்  வெளிப்படுத்தியது. ஏதோ வெளிநாட்டு நகரமோ என்று நினைக்குமளவு வெளிநாட்டவர்கள் நிறைந்திருந்தனர். அதனால் ஆட்டோ விலை உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மூன்றுமடங்காக  காணப்பட்டது. சிங்கள இலக்கிய விழாவில் கவிதை இலக்கியம் பற்றிய பகுதியில் சுவாரஸ்யமான கவிதைகளை கேட்கமுடிந்தது. அது முடிய கோட்டையை நோக்கி சென்றோம். ஓவியங்கள் வரைவதற்கான செயலமர்வும் கண்காட்சியும் எமது நேரத்தை பயனுள்ளதாக மாற்றின. வயது‌ வித்தியாசமின்றி ‌மிக ஆர்வமாக‌ அனைவரும்‌ வரைந்தனர். வரைதல் கொடுத்த மகிழ்ச்சியையும்  அவர்களது கைகளையும்‌ நான் ‌அமைதியாக ரசித்து க...

மாற்றத்துக்கான நிரந்தரம் - Gamperaliya

Image
ஒரு தேசத்தின் உடைமைகளில் அந்த நாட்டின் கலைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. பெருவாரியான தேசங்களின் கலைகளில் சினிமாவுக்கு தரப்படும் முக்கியத்துவம் தனித்துவமானது. உலகளாவிய ரீதியில், சினிமா என்பது கலை மட்டுமல்ல... ஒவ்வொரு நாடும், சினிமாவை மிகப்பெரிய சர்வதேச வணிகமாகவும் அதற்குள்ளே நுட்பமான அரசியல் ஆளுகை தன்மையை ஒளித்து வைத்தும் மறைமுகமாக அறிவுச்சண்டை நிகழ்த்தி வருகின்றது. அந்த வரிசையில் இலங்கை சினிமாவின் நிலை என்ன என்று ஒரு கேள்விகேட்டால், நமக்கு முழுமையான பதிலை சொல்ல முடியாதளவு குழப்பங்கள் இருப்பதால் மௌனமாக புன்னகைத்து மழுப்புவதையே நம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் சற்றே அந்த மௌனத்தை கூறுபிரித்து ஆய்வு செய்தால்.... நாம் ஊமைகள் அல்ல... எல்லாமே ஒருவித வெற்று மௌனம் என்பது இலகுவில் புரிந்துவிடுவதோடு, நம் மௌனத்திற்குள்ளே ஓர் அர்த்தபூர்வமான பதில் புதைந்திருக்கின்றது என்ற உண்மையும்  புலப்படும். இன்று பல நாடுகள் தங்கள் குரலை படைப்புக்கள் மூலம் அழுத்தமாக பதித்து சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுவருகையில், அவர்களால் சாத்தியப்படுத்தப்படும் சினிமா ஏன் இலங்கையில் சாத்தியமில்லை என்று சிந்தித்த...