Posts

Showing posts with the label கவியரங்கம்
Image
நீதிக்கு நெஞ்சோ நிகர் கவிபாட வேளை வந்தது திறந்திருந்த என் பேனையில் வார்த்தைகளைக் கொட்டி குவிக்கிறேன் கிறுக்கல்கள் கவியாகாது இது கிறுக்கச்சியின் உளறல்கள் கவியரங்கில்  நீதிக்கு நெஞ்சோ நிகர்  என்ன கவி சொல்வேன் இங்கு ? வருகிறான் ஒருவன்  என் பக்கத்தில் நிற்க வைக்கிறார்கள்  நிற்கிறான். கண்களில் சிந்தக் காத்திருக்கும் கண்ணீர்  தளர்ந்து போன உடல்  அமைதியும் பயமும் கொண்ட அவன் உள்ளம் பிரார்த்திக்கிறது  சட்டென்று அவன் முகம் மறைத்து  என்னை அவனுடன் இருகப் பிணைத்துவிட்டார் என் அதிகாரி. நேரம் பார்த்து அனுமதிக்க மெல்ல மெல்ல  நான், அவன் கழுத்தை இறுக்கினேன் . என் முழு பலத்தையும் உபயோகித்து  அவன் கழுத்து நரம்புகளை அறுத்தேன். சுவாசக்குழாய் நெரிபட்டு லேசான உடைவுடன்  அவன் நாக்கு வெளித்தள்ள  கண்கள் முழித்தள்ள  மேலும் மேலும் இறுக்கி பிடித்தேன்  வன்மம் பொங்க என் கடமையை தொடர்ந்தேன்  அவன் துடித்தான்  நான் இறுக்கி பிடித்து கழுத்தறுக்க  சில நிமிட போராட்டங்க...
Image
அழுக்கு சூரியன்கள்... பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில்... நிறைந்து கிடக்கிறது பல கோடி சூரியன்கள் நம் கண்ணுக்கு எட்டிய சிறுதூரம் தான் உண்மை என்று எண்ணிக்கிடக்கின்றோம் இன்றுவரை... நம் கண்ணில் கண்ட ஒரு சூரியனை ரட்சகன் என்றெண்ணி கண்ணில் ஒற்றிக்கொள்ளும் மடமைகளுக்கு புரிவதில்லை வாழ்வின் நிஜங்கள் விடிந்த பின்னர் வந்த சூரியன்கள் வாழ்வின் விடிவுகளை தீர்மானிப்பதில்லை சூரியன் இல்லாது விடிந்த பொழுதுகள் உண்டு உலகில் சூரியன் இல்லாது விட்டாலும் விடியும் பொழுது விடிந்ததே தீரும் கவனிக்க .... பலகோடி நிலவுகளும் உண்டு உலகில் அதற்கென்று தனி ஒளியும் உண்டு சில சூரியன்கள், தன் ஒளியை வீசி நிலவொளியை மறைத்து வாழ்வளித்த வள்ளல் என்று போலிப்பெருமை பேசுகிறது நிலையின்றி சுற்றி வரும் நிலவுகள் தான் அவை மேகம் மறைக்க மறைக்க அதிலிருந்து மீளும் நிலைகள் எப்போதுமே அவற்றுக்கு உண்டு அமாவாசையில் மறைக்கப்படும் நிலவுகள் தொலைந்துபோவதில்லை பௌர்ணமிகள் அதற்கு எப்போதும் உண்டு பூமி தொலைந்தாலும் நிலவில் வாழ்வோம் என்ற நம...
Image
பறக்கிறது இந்தக் காட்டையும் விட்டு தன்னந்தனியே நிற்கின்றேன் நான் தலைக்கு மேலே தெரியும் வானம் என் மனதைப்போல முற்றிலும் வெறுமையாய் ... காலணிகளை துறந்து வெற்றுக்கால்களில் நிற்கின்றேன் நான் காய்ந்து போய் குத்தும் மணல்கள் வலிக்கிறது இதயத்தில் .... என் இயலாமையில் நிறையும் வாழ்க்கை நிரப்பபடாத இந்த கானகத்தில் ? என தேடி அலைகின்றேன் நான் .... நான் தேடி அலைவது என்னை எனக்கான அடையாளத்தை அடைவேனா என்னை ? நரமயமாக்களில்... தாராளமயமாக்கலில் ... உலகமயமாக்களில் ... ஆட்பட்டு போன உங்களுக்கு காடு என்பதன் பொருள் என்ன ? வெறும் மரம் சூழ்ந்த பகுதியல்ல காடுகள் பயங்கர விலங்குகள் நிறைந்த இடமோ வாழத்தகுதியற்ற உறைவிடமோ அல்ல காடுகள் ... பல்லாயிரம் வருடமாய் செழித்து நெடிந்துயர்ந்து வான்தொட்டு நிற்கும் மரங்களும் செடிகொடி தாவரங்களும் இருவாச்சிகள் இரவாடிகள் இறைச்சி உண்ணிகள் பெரிய காட்டுயிர்களும் புழு பூச்சிகள் பறவைகள் நீருயிர்கள் என இயற்கை கூறுகள் அனைத்தும் இணைந்த எண்ணற்ற உயிரினங்களின் வாழ்வாதரமான அற்புத கட்டமைப்பே காடு அதுவே எங்கள் வீடு காடு அது தனி உலகம் உயிரோட்டமாய் வ...
Image
  கனாப் பொழுதில்... மனித சுவாசம் போல கனவு தேசம் கருவறை காரிருள் நீர்த்து பிறக்கையிலேயே கனவுகள் கவ்விக் கொள்கின்றன. வாழ்வின் சுவை அறிய செய்யும் விதவிதமான கனவுகள் நாம் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் கனவுகள் எமக்கு மட்டும் சொந்தமில்லை .... யாருமேயின்றி அனாதையாக நகரும் பொழுதுகள் கானாப் பொழுதில்.... விழிகள் மூடினாலும் திறந்தாலும் இருள் சூழ்ந்த அறை உலகின் தரிசனங்கள் நித்தமும் சிறைவைக்கப்பட்ட சிதைந்து போன கனவுகளுடன் காலம் கடத்துபவர்களின் நிலையை யாரறிவார் எல்லோருக்கும் கனாப் பொழுதுகள் எங்களுக்கு பொழுதுகளே கனாவாய் .... கனப்பொழுதில் கடக்கிறது பேருந்து ... சிறைசாலை வழியே போகும்போதும் வரும்போதும் தெரியும் நீளவாக்கில் உயரமான சுவரால் ஆன கட்டிடம் திரும்பிப்பார்க்காமல் போகமுடியாது அந்த சிறைமதில்களை காரணம் அந்த மதில்கள் சுமந்திருக்கும் கனவுகள் ஒவ்வொரு கைதியினதும் கனவுகள் நீங்கள் என்ன உணர்வீர்கள் கடந்துசெல்லும் வழியில் சிறைச்சாலை இருந்தால்..... எப்பொழுதும் கடந்து விடுகிறோம் நாம் அதை வெறும் கட்டிடமாக நினைத்து -ஆனால் அந்த கட்டிடத்திற்குள் ...
Image
ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் ! எத்தனை கண்ணீர் வாழ்க்கையில் வந்து போனாலும் ஓர் கண்ணீர்க்கு மட்டும் ஒப்பில்லா உயர்வுண்டு உலகில் -ஏனெனில் அதுமட்டுமே ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் ! என் கண்முன்னே தெரியும் உலகம் இன்று மட்டும் ஏதோ விசித்திரமாய் …. சூன்யப் புள்ளிகளில் சுற்றி திரியும் மனதில் மெல்ல எழுகின்றது பயத்தின் புகை மடல்கள் மரண முடிவும் ஜீவ தொடர்ச்சியும் நிலைபெறும் போது ஓர் சுழற்சியில் சிக்கி தவிக்கிறது மனது சிற்றூசிகளை கொட்டிக்குத்தியத்தைப்போல வயிற்றில் ஓர் பிடிப்பு முளைக்கத்துடிகும் விதை நேரம் பார்க்கும் பொழுதாய் நான் தாயாகும் இந்த பொழுது உடல்வலி ....மன வலி ..எல்லாம் கடந்து நினைவுகள் நீள்கிறது என் தாயை நோக்கி ..... என் விழிகளுக்குள்ளே வலிகளைத்தாண்டி அவள் முகசுருக்கங்களில் கனவுகளையும் கவலைகளையும் தேக்கி வைத்து ஏக்கத்துடன் பார்த்த பார்வைகள் எதுவும் பேசாமல் மௌனங்கலாலேயே என் மனம் படித்தவளின் குரல் என் காதுகளின் அருகாமையில் ... என் கண்ணே என்னவளே என் உயிரில் உதித்த உறவே .... அழுத்தத்தை உதறி அவிழும் கம்பி சுருலென எழும் என் தாய்மையின் நினைவ...