கடலின் ராஜவில்லன்கள்
பெயரிலேயே சிங்கத்தை வைத்திருக்கிற இந்த மீன்கள் கடலின் ராஜாவாக உள்ள அதே வேளை வில்லனாகவும் இருக்கிறது.
பசிஃபிக் சிங்க மீன் (Pacific lionfish) என்று அழைக்கப்படுற இந்த வகை மீன்கள், பெரும்பாலும் பசிஃபிக் கடல்களில் வாழ்வதாலும், உடல் முட்களை விரிக்கும்போது சிங்கம் போன்ற தோற்றத்தினை ஒத்து இருப்பதாலும் இவற்றுக்கு "பசிஃபிக் சிங்க மீன் "என்று பெயர் வந்ததாக சொல்ல படுகிறது.
அலங்கார மீன்களில் அதிக விலைக்கு போகும் மீன் இனம், பார்ப்பதற்கு மிக அழகாகவும் ரம்மியமாகவும் காட்சி அளிக்கும். உடல் முழுவதும் ஒரு வித விஷமுட்களையும், எதிரி/உணவைத் தாக்கும்போது அம்முட்களை அகல விரித்துத் தாக்கும் தன்மையும்கொண்ட, ஒரு வகை அசைவ உயிரினங்களாகும்.
மேற்கு பசுபிக் கடல்தான், இந்த அரிய வகை மீன்களின் வாழ்விடமாக உள்ளன .பெரும்பாலும் பசிஃபிக் கடலில் இருந்தாலும், கடந்த 1990ல் அமெரிக்காவின் ஃப்ளோரிடா முதல் ரோட் தீவுவரை (Florida to Rhode Island) உள்ள கடல்பகுதிகளில் காணப்பட்டன.
இதன் இனப்பெருக்கம் மிக வேகமாக பல்கிப் பெருகி வருகிறது. கரீபியன் தீவு தென் அமெரிக்க கடற்பகுதிகளிலும் இந்த மீன்கள் அதிக அளவில் தோன்ற ஆரம்பித்து விட்டன. பசிஃபிக் கடலிலிருந்து அமெரிக்கா கடலுக்கு வந்து சுற்றியுள்ள மீன்களையெல்லாம் சாப்பிடுகிறது.
இந்த மீன்கள் இருக்கும் இடத்தில் 80 சத விகிதம் சின்ன மீன்கள் அழிந்து விடுகின்றனவாம். ஒரு சிங்க மீன், வெறும் 5 வாரங்களில் சுற்றியுள்ள மற்ற மீன்களில் 75% கொன்று உண்ணும் திறனுள்ளவை .
அழகான சக மீன்களான கார்டினல், கிளி மற்றும் டேம்செல் மீன் ( cardinalfish, parrotfish, damselfish) எல்லாவற்றையும் தின்று
விடுகிறது. வெறும் 30 நிமிடங்களில், ஒரு சிங்க மீன் சுமார் 20 சின்ன மீன்களை சாப்பிடகூடியது.
இந்த சிங்க மீன் 15 அங்குலம் வளரக் கூடியவை ஆயுட்காலம் 5 முதல் 10 ஆண்டுகள் .பல சிறிய மீன்கள் ,சிங்க மீன்களின்அருகில் நீந்திப்போய் கடைசியில் பாறை என நினைத்து அதன் வயிற்றுக்குள் அடைக்கலம் ஆகிவிடும். சிங்க மீன் வயிற்றுக்குள் போகும் மீன்கள் எல்லாமே, கடல் களைகளை (seaweed) உண்ணுவதன் மூலம் களைகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் சைவ உண்ணிகள்.
இச்சிறிய மீன்கள் இல்லாவிடில் கடல் களைகள் எல்லாம் பெருத்து பவளப் பாறைகளை அழித்துவிடும். சிங்க மீன்களால் கரிபியன் பவளப் பாறைகளுக்கு பல பிரச்சினைகள் உருவாகி உள்ளது.
இதற்காகவே அறிவியல் அமைப்பு (National Science Foundation) ஒரிகான் மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு, இதை கட்டுப்படுத்தும் முகமாக 3 வருட ஆய்வுக்காக $700,000 உதவித்தொகை வழங்கியுள்ளது.
ஸ்கோபியன் மீன் இனத்தை சேர்ந்த இந்த மீன்களுக்கு வெளிப்புறமாக ஊசி போன்ற 18முட்கள் உள்ளன. இவை அதிக விஷம் கொண்டவையாகும்.
பார்ப்பதற்கு மிக அழகாக தோற்றம் அளிக்கும் இந்த மீன்கள் நமக்கும் மிகவும் ஆபத்தானவை. ஊசி போன்ற இந்த முட்களினால் இந்த மீன் மனிதனை தாக்கினால் போதும் மிகக் கடுமையான வலி ஏற்படுவதுடன் வாந்தி, சுவாசப் பிரச்சனைகள், பக்கவாதம், அரிதான மரணமும் ஏற்படும்.
பாரம்பரிய மீன்பிடி முறைகளான வலைகளுக்கும் இந்த மீன் கட்டுப்படதாம். சிங்க மீனை சாப்பிடக்கூடிய பெரிய மீனையெல்லாம் நம் மீனவர்கள் பிடித்துவிடுகிறார்கள் அத்தோடு மிகுதியுள்ள பெரிய மீன்கள் சிங்க மீனை சாப்பிடாது.
சுறா மாதிரியான மீன்களுக்கு சிங்க மீனோட விஷமுட்கள் ஒரு பெரிய தடை! இதை கட்டுபடுத்த சிங்க மீனை ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீனாக (Conservation dish) விளம்பரப்படுத்தி, அதை சாப்பிட்டால் சுற்றுச்சூழலை பாதுக்காக்க உதவ முடியும் என்று, இந்த மீன்களை உணவாய்ச் சாப்பிட மக்களை தூண்டவேண்டும்.
உலகின் சில பகுதிகளில் மிகப் பிரபலமான உணவாக இந்த மீன்கள் விளங்கினாலும் இதன் இனப்பெருக்கம் மற்ற வகை இனமீன் அழிவுக்கு காரணமாகி வருவதால் சிங்க மீன்களை அமெரிக்கா, மெக்சிகோ, பெய்லிஸ் போன்ற நாடுகள் கட்டுபடுத்த முயற்சி மேற்கொண்டுள்ளன
ஆபத்தான சிங்கமீன்கள் கடலின் ராஜவில்லன்கள் ஆகும்.
பவளப் பாறைகளை அழித்து சுற்று சூழலை மாசுபடுத்தும் இவை அழகை விட ஆபத்தை உருவாக்குகின்றன என்பதே உண்மை.
good information bavi...
ReplyDelete