நாகலிங்க பூ


உலகம்முழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக வணங்கப்படும் பூக்கள் தான் நாகலிங்கப் பூக்கள்.
ஏன் என்றால் இதன் அமைப்பு ஒரு ஆன்மிக அதிசயம் பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நடுவில் சிவலிங்கமும், அதைச்சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள் அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு இருப்பதைப்போல தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும்.
இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும்அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது.
இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.
இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர். நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாகும்.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கின்ற இப்பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன.
ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன.
 அக்காலத்தில் நாகலிங்க மரங்கள் கோவில்களில் வளர்க்கப்பட்டன ஏன் என்றால் இந்த அபூர்வ மூலிகை இனம் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன.
அத்துடன் இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாகவும் நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.
இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உட்கொண்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இம்மரத்தின் பழங்கள் விஷத்தன்மை உடையதால் விஷ காய்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது.
இலை மற்றும் பழங்களில் டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை காணப்படுகின்றன.
இவை எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உட்பட உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது.
இதன் பட்டைகள் மலேரியாவை குணப்படுத்தக் கூடியது. பற்களை பாதுகாக்கும் இயல்பு இப்பூக்களுக்கு உண்டு. இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட்டால் பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேற்றப்பட்டு பல்வலியை குறையும் பற்கள் சொத்தையாகாமல் தடுக்கப்படும்.
இலைகளை அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும்.
இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும்.
இப்பூவி லிருந்து எடுக்கப்படும் தைலம் குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் இந்த நாகலிங்க பூக்கள், மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால் ஆன்மிகத்துடன் ஆரோக்கியத்திற்கும் வழிகோலுகிறது.

Comments

Popular posts from this blog

86வது ஆஸ்கார் விருதுவழங்கும் விழா

தென்கொரிய திரைப்பட விழா 2016 – இலங்கை