பாதம் பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள்
வாரத்துக்கு 5 நாட்கள் தினமும் 10அல்லது12 பாதாம் பருப்புகளைச் சாப்பிட்டு வந்தால் நீங்கள் உற்சாகத்தையும் உடல் நலத்தையும் பெறலாம். கொஞ்சம் கூடுதல் செலவு என்றாலும் ஆயுள் நீடிப்பது உறுதி. இதில் அதிகம் கல்சியம் உள்ளதால் ஒல்லியான பெண்கள் எலும்பு மெலிவு நோயில் விழுந்து விடாமல் பாதுகாக்கும்.
பாதாம் பருப்பில் மூளையையும் சிறுநிரகத்தையும் பாதுகாக்கும் பொஸ்பரஸ் உப்பு கல்சியத்தை விட இரு மடங்கு உள்ளது. இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் பாதாம் பருப்பில் தாராளமாக உள்ளது.
கொழுப்பு சத்து அதிகமுள்ள பாதாம் பருப்பு இரத்தத்தில் உள்ள தீய கொலஸ்ட்ரோல் அளவை குறைகிறது. நல்ல கொலஸ்ரோலை அளவுடன் இருக்க உதவுகிறது.
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, ஜீரண சக்தியை அதிகபடுத்தும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு. பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது. புரதமும் அதிகம் உள்ளது.
பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர்.
நரம்பு மண்டலத்தை காக்கும் நியாஸின் உப்பும் இதில் அதிகம் உள்ளது. நார்ச்சத்தும் போதுமான அளவு உள்ளது. எனவே இதய நோயாளிகளும் பசி பொறுக்க முடியாதவர்களும் தினமும் பத்து பாதாம் பருப்புகளை சாப்பிடலாம்.
உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.
Comments
Post a Comment