சூரியகாந்தி பூ
உலகத்தில் எத்தனை பூக்கள் இருந்தாலும் சூரியகாந்திப் பூவிற்கு நிகர் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
பூக்களுக்கு அழகு ராணிப்போட்டி வைத்தால் சூரியகாந்தி தான் வெற்றி பெறும். பூக்களில் தனித்தன்மையானது அது மட்டும் தான்.
கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்ட சூரியகாந்தியானது பெரும்பாலும் பசுமைக் கொள்கையின் அடையாளமாகப் பயன்படும்.
சைவ சமூகத்தின் சின்னமாகவும் சூரியகாந்தி உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, இப்பூவானது கலைநயமுடைய இயக்கத்தின் அடையாளமாகப் பயன்பட்டது.
சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. ஆனால் காட்டுச் சூரியகாந்தி மட்டும் சூரியனை நோக்கித் திரும்பாது.
சூரியகாந்திகள் சிறப்பாக வளருவதற்கு முழுமையான சூரியன் தேவை. அவை ஏராளமான பத்திரக்கலவையுடன் வளம்மிக்க, ஈரமான, நன்கு -வடிகட்டப்படும் மண்ணில் மிகச்சிறப்பாக வளரும். வர்த்தகரீதியான பயிர்ச்செய்கையில்,. சூரியகாந்தி "முழுமையான விதை" (பழம்) சிற்றுண்டியாக விற்கப்படும்.
இதை பறவைகளுக்கான உணவாகவும் விற்கிறார்கள், சமையலிலும் பச்சைக்காய்கறிக் கலவைகளிலும் இதை நேரடியாகப் பயன்படுத்தலாம்.
விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சூரியகாந்தி எண்ணெய் தாங்கி எண்ணெயாக சமையலுக்குப் பயன்படும், மேலும் இது ஒலிவ் எண்ணெயைவிட மலிவாக இருப்பதால் வெண்ணெய் (மார்ஜரின்) மற்றும் பயோடீசல் தயாரிப்புக்கும் பயன்படும்.
எண்ணெய் எடுப்பதற்காக விதைகளை பதப்படுத்திய பின்னர் எஞ்சுகின்ற கட்டியை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
இப்படி எத்தனையோ பயன்கள் சூரிய காந்தியில் உள்ளன உடலுக்கு தேவையான சத்துகள் மட்டுமல்ல எராளமான மருத்துவ குணங்களும் இப்பூவில் அடங்கி உள்ளன .
சப்போனின்கள்-ஹீலியான்தோஸைடுகள், A,B&C லினோலிக், மிரிஸ்டிக், பாலிமிட்டிக், ஒலியாக், ஸ்டீரியக் அமிலம், விட்டமின்கள் A,D,மற்றும் E காணப்படுகின்றன.
விதைகளில் அசிட்டோன், ஃபார்மிக் அமிலம் மெத்தில் ஆல்கஹால் போன்ற செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
சீதபேதி, வயிற்றுவலி, வலியுடன் சிறுநீர்கழிதல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும். சிறுநீர் கழிவை அதிகரிக்கும் கபம் வெளியேற்றும்.
சுவாச குழாய், குரல்வளை மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்தும். இருமல் ஜலதோஷத்திற்கு ஏற்ற மருந்து சூரியகாந்தி.
மண்ணீரல் கோளாறுகள், புண்களை ஆற்றுதல் என்பதோடு காய்ச்சலை குணப்படுத்தும். கண்வலியுடன் கண்கள் வீங்குதலை தவிர்க்க உதவும்
சூரியகந்திப்பூவின் விதைகள் கிருமி கொல்லிகள்.
சூரியகாந்தி விதையில் காணப்படும் மெக்னீசியம் நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதில் இதன் பங்கு முக்கியமானது.
இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகின்றன.
சூரியகந்திப்பூவின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிக கொழுப்புச்சத்தை குறைக்கும் தன்மையானது பக்கவாத நோய் தாக்குதலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதும் தடுக்கப்படுகிறது.
இதில் உள்ள விட்டமின் E உயிர்சத்து உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்தினை குறைக்க உதவுகிறது. நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது. பெண்களின் மாதவிடாய் கால மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இது புகைப்பிடிக்கும் பழக்கதிற்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை கைவிட கறுப்பு தோலை நீக்கிய சூரிய காந்தி விதைகளை சில நாட்கள் தொடர்ந்து மென்று தின்று வந்தால் புகைப்பழக்கம் மறந்து விடும்
Comments
Post a Comment