Posts

Image
அம்மா-நான்-அன்பு பரிசில்களால் வாழ்த்துகளால் ஈடு செய்ய முடியாத அன்போடு எப்போதும் நீங்கள் ... வெறுமையோடு அமைதியாக இப்போதும் நான் ... இந்த வாழ்வியல் முரண்பாடுகள் உங்கள் அன்புக்கு முன் தோற்றுபோகவே செய்யும் அது புரியாத குழந்தையாக அன்றும் ...இன்றும் ...என்றும் ... நான் 
Image
பெண் சமத்துவம் ? ''மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? அப்படி என்ன உங்களுக்கு உரிமை இல்லை பாரதி காலத்தில் உரிமை இல்லை என்று போராடினால் அது நியாயம் அன்று பெண்கள் அடிமையாக இருந்தார்கள் இன்று உங்களுக்கு என்ன குறை? படிக்க முடியும் வேலைக்கு போக முடியும் விரும்பியபடி பணம் உடை வாழ்க்கைமுறை வசதி வாய்ப்புக்கள் எல்லாம் இருக்கிறது உடன்கட்டை முறை கூட இல்லை எப்படி எல்லா கொடுமைகளும் ஒழிந்தாயிற்று இன்னும் என்ன உரிமை வேண்டும் ? அடக்குமுறை அடக்குமுறை என்று கூப்பாடு போடுகின்றிர்கள் பெண்ணியம் பேசுவது இப்ப ஒரு fashion எப்ப பார்த்தாலும் ஆண்களை குறை சொல்லிக்கொண்டு .....'' இப்படி தொடர்கிறது சிலரின் அங்கலாய்ப்பு .... இந்த வாரத்தைகளை கேட்ட போது எனக்கு கோபமே வரவில்லை .காரணம் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று சிந்திப்பது பெரிய விடயம் அந்த சிந்தையை வரவேற்கிறேன் முதலில் ஒருவிடயத்தை பதிவு செய்ய நினைக்கிறன் ஆண்கள் எல்லோரும் தவறானவர்கள் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் கூறவில்லை இருவரும் மனிதர்கள் சரியும் தவறும் கொண்ட சராசரி வாழ்வை கொண்டவர்கள் தான் நாங்கள் ஆண்கள் தவறானவர்கள் அல்ல ....என் வ...
Image
அன்றும்... இன்றும்... என்றும்... 7.35க்கு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன் ... தெருமுனையை கடக்க முன்னர் சைக்கிளில் வந்தவன்  சொன்ன அரைகுறை ஆபாச வாசகம் காதில் விழுந்தது  தொடர்ந்து நடந்தேன் .... பேருந்தில் நடந்துனர் பணம் வாங்கும் சாக்கில்  கைகளை தொட முயன்றார்.என் பக்கத்தில் நிற்கும் பெண்ணுக்கு மிகுதி பணம் கொடுக்கும் சாக்கில் உடலில் படுமாறு கைகளை நீட்ட முயன்றதை மெல்ல நகர்ந்து கைப்பையால் தடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன் நிறுத்தத்தில் இறங்கி நடந்தால் எதிர்படுபவன் அழைக்கிறான் ஏய்...பாப்பா என்று . அடுத்த வசனம் காதில் விழ முன்னர் நடையை வேகப்படுத்தினேன் இரவு இருளை கடைதெரு விளக்குகள் அகற்ற முயல... உள் வீதி வீடுகள் மட்டும் வரவேற்றுகொண்டன . அந்த அரைகுறை வெளிச்சத்தில் மழை சகதியில் அருவருப்போடு நடந்து கொண்டிருக்கையில் கூட நடந்த ஒருவன் அழைத்த வாரத்தைகளை கேட்டும் கேட்காதது போலவே மேலும் நடந்தேன் வீட்டை நெருங்க கொஞ்ச நேரமே இருந்த நிலையில் எதிர்பட்ட ஒரு கும்பல் விசிலடித்து நெருங்க சட்டென்று நகர்ந்து எங்கள் வீதி நுழைந்தேன் வீட்டில் நுழைந்து செருப்பைக் கழற்றுகையில்  க...

86வது ஆஸ்கார் விருதுவழங்கும் விழா

Image
Adapted Screenplay  Before midnight 1995ல் வெளியான Before sunrise , 2004ல்  வெளியான Before sunset படங்களோட தொடர்ச்சியா கடந்த வருடம் வெளியான படம் தான் Before midnight. Richard Linglater, Ethan Hawke, Julie delpy மூவாரல் எடுக்கப்பட்ட இந்த படம் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில்... Boston online film awards,39th los angeles awards,san diego film society,indiana film association,national society awards போன்ற விருதுகளை திரைக்கதைக்காக சுவிகரித்துள்ளது . இத்தனை விருதுகளை வென்றதால் நிச்சயம் இந்தப்படம் Adapted Screenplay காண விருதை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதோடு இரண்டாம் பாகமான Before sunset 77 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் Adapted Screenplay விருதை வென்றது . அதனால் விருது நிச்சயம் என்று உறுதிப்படுத்துகின்றார்கள் ரசிகர்கள் . Captain Phillips Captain phillips உண்மை சம்பவங்களின் தொகுப்பு . 2009 ம் ஆண்டு Maersk Alabma என்கிற கப்பலை சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்தி வைத்து மிரட்ட அதை மீட்ட கப்பல் கேப்டன...

What time is it there?

Image
பிறக்கும் போது தனித்தே பிறக்கிறோம் இறக்கும் போதும் தனித்தே இறக்கிறோம்  ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்வில்  யாரும்  இல்லாத தனிமையும் வெறுமையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாத வலி தான் ... பிறந்தவுடன் குழந்தை தன்னை நோக்கி வரும்  விரல்களை பற்றி பிடித்துகொள்ளும் அது போல வாழ்நாள் முழுக்க  யாரோ ஒருவரின் (அல்லது சிலரின் ) பிரியங்களுக்காகவும் துணைக்காகவும் ஏங்கித்தவிக்கிறோம் யாருமில்லாத நிலையில் நகராத வாழ்வும்  சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நிழல் போல தொடரும் மனத்தனிமையும்  உணரும் மனிதர்களின் வலியை எப்போதும் பிறரால் உணரமுடியாது ... அப்படிப்பட்ட மனிதர்களின் தவிர்க்க முடியாத தனிமையை திரைமொழியில் தந்த படம் தான்   What time is it there? கேங் தந்தையின் திடீர் மரணத்துக்கு பிறகு இரவுகளில் பயம் கலந்த தனிமையை உணர்கிறான் .தூக்கம் வராது விழித்திருந்து பின்னிரவுகளில் உறங்குகிறான் . கடிகாரங்களை விற்பனை செய்யும் அவன் வாழ்வில் நேரத்தை கடத்த துணையாக யாருமில்லை . வேலை,வீடு தவிர்த்து அவன் உலகத்தில் எதுவுமில்லை யாருமில்லை . ஒரு நாள் கேங்கிடம...
Image
UP வாழ்க்கை என்பது ஒரு பயணம். அந்த பயணம் சாகசங்கள் நிரம்பியதாக சராசரி வாழ்வில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்று நம்மில் பெரும்பாலானோர் ஆசைப்படுகிறோம் . மற்றவர்களிலிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக்காட்ட அல்லது தனித்து அடையாப்படுத்த நம் தோற்றம் ,இயல்பு ,குணம் ,வாழ்முறை என்று அனைத்தையும் மாற்றிக்கொள்ள  முனைகிறோம் . அப்படி எல்லாம் அடைந்த பிறகு அதில் சந்தோசமும் நிம்மதியும் இருகிறதா என்றால் பெரும்பாலானோருக்கு இல்லை என்றே சொல்லலாம் .சராசரி வாழ்க்கையில் சந்திக்கும் அன்பு கலந்த அற்புத நிமிடங்கள் சாகச வாழ்க்கையில் கிடைப்பதில்லை .நமக்கிருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்க்கையில் அப்படிபட்ட சந்தோசங்கள் இல்லாத நிலை   சில சமயம் வெறுமை தந்துவிடும் . உண்மையான அன்புடன் பிறருக்கு உதவும் சில சந்தர்ப்பங்கள் ,பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளும் இயல்பு வாழ்க்கை  இது  தான் உண்மை,1000 சாகசங்கள் ஈடாகாது  அன்பின் சில நிமிட தருணங்களுக்கு என்பதை உணர்த்திய அற்புத திரைப்படம் தான் UP                       ...
Image
நீ...நான்...காதல்...  நீ இன்றி நான் இல்லையே ... உடல் இன்றி நிழல்  இல்லையே .. உயிர் தேடும் உடல் போல  நம்மை தேடிடும் நம் காதலே  வினா  தேடும் விடை  போல முதல் முரணாய் நாமிருவர் ... நுண் பூகம்ப விரிசல்கள் போல  பிரிந்த நம் காதலே ... காதலின் மழையிலே என் மௌனங்கள் கரைய உன் அருகில் வாழ்ந்திட என் ஆயுள் நினைக்க கண்ணீர் துளியில் கரையும் இதயம் கவிதை பாடும் உனக்காகவே  எல்லாம் கனவாக நிஜங்கள் நஞ்சாக உயிர் வதை தரும் என் காதலே நீ இன்றி நான் இல்லையே ... உடல் இன்றி நிழல்  இல்லையே .. உயிர் தேடும் உடல் போல  நம்மை தேடிடும் நம் காதலே  உன்னைக் கண்ட வேளை  வாழ்வில்  உன் சிரிப்பில் நிலைத்த நாட்கள் உலகில்  கண்ணில் வளர்ந்த காதல் உயிரில்  நினைகிறதே மனதே  உன் கைகள் கோர்த்து சென்ற நேரங்கள்  சேர்ந்து நடந்த அந்தி சாலைகள்  தோளில் சாய்ந்த அன்பு பொழுதுகள்  நினைகிறதே மனதே  மனதினில் ஒரு கனம் பரவ நினைவினில் அது ரணமாக  ...