86வது ஆஸ்கார் விருதுவழங்கும் விழா
Adapted Screenplay
Before midnight
1995ல் வெளியான Before sunrise , 2004ல் வெளியான Before sunset படங்களோட தொடர்ச்சியா கடந்த வருடம் வெளியான படம் தான் Before midnight.
Richard Linglater, Ethan Hawke, Julie delpy மூவாரல் எடுக்கப்பட்ட இந்த படம் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதில்...
Boston online film awards,39th los angeles awards,san diego film society,indiana film association,national society awards போன்ற விருதுகளை திரைக்கதைக்காக சுவிகரித்துள்ளது .
இத்தனை விருதுகளை வென்றதால் நிச்சயம் இந்தப்படம் Adapted Screenplay காண விருதை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
அதோடு இரண்டாம் பாகமான Before sunset 77 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் Adapted Screenplay விருதை வென்றது .
அதனால் விருது நிச்சயம் என்று உறுதிப்படுத்துகின்றார்கள் ரசிகர்கள் .
Captain Phillips
Captain phillips உண்மை சம்பவங்களின் தொகுப்பு .
2009 ம் ஆண்டு Maersk Alabma என்கிற கப்பலை சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்தி வைத்து மிரட்ட அதை மீட்ட கப்பல் கேப்டன் தான் Richard Phillips.
இதை அடிப்படையாக வைத்து எழுதப் பட்ட புத்தகம் தான் A Captain's duty.அதன் திரை வடிவம்தான் இந்தப்படம்.
Billy ray தான் திரைக்கதை எழுதியுள்ளார் .பல திரைப்பட விழாக்களில் பல பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் திரைக்கதைக்காக மட்டும் எந்த விருதையும் வெல்லவில்லை
Philomena
பிரிட்டிஷ் அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான Philomena ,
'' The Lost Child of Philomena lee ''என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது .
இந்த புத்தகத்தை எழுதியவர்
ஊடகவியலாளரான Martin sixsmith.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த திரைக்கதைக்கு வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது கிடைத்தது .அதனால் ஆஸ்கார் கிடைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கும் படக்குழுவிற்கும் இருகின்றது
12 Years a slave
அமெரிக்காவில் அடிமைகள் வியாபாரம் நடந்துகொண்டிருந்த காலத்தில் இசைகலைஞான Solomon Northup அடிமையாக விற் கப்படுகிறான் .அவனுடைய 12 வருட அடிமை வாழ்வை பற்றியது இந்த படம் .
solomon northupcஎழுதிய சுயசரிதமான
12 years a slave அதே பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது .
அதிக விருதுகளை பெற்றிருக்கிற இந்தப்படம் வரலாற்றை அப்படியே ஆவணப்படுத்தியிருப்பதால் நடுவர்களின் தேர்வாக அமையும் என்று எதிர்பர்க்கப்படுகிறது
The wolf of wall street
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து தனது பேச்சு திறமையாலும்
புத்திசாலிதனத்தாலும் முன்னேறி மிகபெரிய சாம் ராஜ்யத்தை கட்டி எழுப்பியவர் தான் Jordan belfert.
தனிமை வறுமை முயற்சி பணம் புகழ் மோசடி சிறை என்று அவரது கலவையான வாழ்க்கையை சிறையில் இருந்த போது சுய சரிதையாக எழுதினார்
விற்பனையில் சாதனை படைத்து இந்த புத்தகம் .
அதை மிக சிறப்பாக திரையாக்கியுள்ளார்
அதிகமானோரின் எதிர்பார்ப்பு இந்த படம் தான்
Comments
Post a Comment