The Red Balloon சிறு வயதில் பலூன்கள் மேல் எனக்கு அளவிடமுடியாத ஆசை இருந்தது. அதே ஆசை இன்று இருக்கிறதா என்றால் பதில் சொல்லத்தெரியவில்லை பலூன்களைப்பார்க்கும் போது ஒரு இனம்புரியாத ஆர்வம் ஏற்பட்டாலும் நான் ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லை என்ற எண்ணம் வர அடுத்த நிமிஷம் ஆர்வம் குன்றிப்போய் விடும் பாலூன்களோடு சேர்த்து எனது சிறு பராயமும் தொலைந்துவிட்டது. தொலைந்து போன நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்தது ஒரு குறும்படம் "The Red Balloon" பள்ளிக்கு செல்லும் ஒரு சிறுவன் மின் கம்பத்தில் சிக்கிகொண்டிருக்கும் ஒரு பலூனை காண்கிறான் சிவப்பு நிறத்தில் பெரிதாய் இருக்கும் அந்த பலூனை பார்க்க எனக்கே ஆசை வருகிறது என்றால் , அந்த சிறுவனுக்கு ஆசை வராமலா இருக்கும் ? பலூனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு செல்ல தொடங்குகிறான். பலூனோடு வரும் சிறுவனை பேருந்தில் ஏற்ற மறுக்கிறார் நடத்துனர் . பலூனை பிரிய மனமில்லாத சிறுவனும் பலூனை எடுத்துக்கொண்டு ஓடத்தொடங்குகின்றான் . பலூனை பள்ளியின் உள்ளே எடுத்து செல்ல முடியாத காரணத்தால் பள்ளிப்பணியாளரிடம் ஒப்பட...
Popular posts from this blog
தர்மம்
தினமும் வீட்டை விட்டு தெருவை தாண்டும் போது எதிர்படும் மனிதர்கள் எத்தனை எத்தனை ? அவர்களில் ஒரு பிரிவினர் தம் வாழ்க்கைக்காக கையேந்துகிறார்கள் நான் நடக்கும் சிறு தெருவில் குறைந்தது 5 பேராவது எதிர்படுகிறார்கள், கை ஏந்துகிறார்கள் ,கெஞ்சுகிறார்கள் ,கால்தொட்டு யாசிக்கின்றார்கள், கதறி அழுகின்றார்கள் ..... அவர்களின் முகம் பார்க்கும் திராணியற்று குற்ற உணர்ச்சியுடன் கடந்து போகிறேன் நித்தமும் ... நான் கடந்தவர்களில் யாருடைய வாழ்க்கை இது ? Cast:Master Ashish,Shivaji Rao,Pandiyan,Raaghav,Pradeep,Gayathri,Dwarkesh Crew: Writer – Director: Madonne Ashwin Cinematography: Raja Bhattacharjee Editing & Sound Design: Abhinav Sunder Nayak Sound Effects: Narayanan Camera Assistant: Kannan Assistant Directors: Dwarkesh, Rajkumar, Karthik தர்மம் திரைப்படத்தின் கதை நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் . நாம் தினமும் சந்திக்கும் மனிதர்கள் தான் படத்தில் இடம் பெறுகிறார்கள் . வறுமையில் வாழும் இயலாமை மனிதர்கள் யாசகத்துக்காக கை ஏந்தினால் 'சீ போ' என்று விரட்டுகின்றோம் ...
What time is it there?
பிறக்கும் போது தனித்தே பிறக்கிறோம் இறக்கும் போதும் தனித்தே இறக்கிறோம் ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்வில் யாரும் இல்லாத தனிமையும் வெறுமையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாத வலி தான் ... பிறந்தவுடன் குழந்தை தன்னை நோக்கி வரும் விரல்களை பற்றி பிடித்துகொள்ளும் அது போல வாழ்நாள் முழுக்க யாரோ ஒருவரின் (அல்லது சிலரின் ) பிரியங்களுக்காகவும் துணைக்காகவும் ஏங்கித்தவிக்கிறோம் யாருமில்லாத நிலையில் நகராத வாழ்வும் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நிழல் போல தொடரும் மனத்தனிமையும் உணரும் மனிதர்களின் வலியை எப்போதும் பிறரால் உணரமுடியாது ... அப்படிப்பட்ட மனிதர்களின் தவிர்க்க முடியாத தனிமையை திரைமொழியில் தந்த படம் தான் What time is it there? கேங் தந்தையின் திடீர் மரணத்துக்கு பிறகு இரவுகளில் பயம் கலந்த தனிமையை உணர்கிறான் .தூக்கம் வராது விழித்திருந்து பின்னிரவுகளில் உறங்குகிறான் . கடிகாரங்களை விற்பனை செய்யும் அவன் வாழ்வில் நேரத்தை கடத்த துணையாக யாருமில்லை . வேலை,வீடு தவிர்த்து அவன் உலகத்தில் எதுவுமில்லை யாருமில்லை . ஒரு நாள் கேங்கிடம...






Comments
Post a Comment