Posts

அவளில் அவள்கள்

Image
திரை-கதை-தொடர் -பகுதி 1  அன்று - கார்லோட்டா . பேரழகி வறுமையால் வாடிய அவளை ஒரு பணக்காரன் திருமணம் செய்துகொள்கிறான் . காதலால் வாழ்க்கை அழகானதை எண்ணி மகிழ்கிறாள்.   ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை . ஒருநாள் அவளது கணவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துசென்றுவிடுகிறான் . குழந்தை பறிபோன ஏக்கத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு வருவோர் போவோரிடமெல்லாம் குழந்தையை கேட்டு கதறி அழுதவள் தனிமையும் துயரும் தாங்காமல் ஒருநாள் மலையுச்சிக்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறாள் . இன்று Madeleine தினமும் காலை வீட்டிலிருந்து கிளம்பி பூக்கடைக்கு சென்று அங்கு ஒரு பூச்செண்டை வாங்குகிறாள் . அதன் பிறகு Carlottaவின் கல்லறைக்கு சென்று அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பவள் அருகிலிருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்று Carlottaவின் படத்தை பார்த்துக்கொண்டே பல மணிநேரம் அமர்ந்திருப்பாள். கார்லோட்டா படத்தில் வைத்திருக்கும் பூக்கள்தான் மெடலின் கைகளிலும் இருக்கும் . அதே போன்ற கூந்தல் அலங்காரத்தை செய்து அதே மாதிரி அமர்ந்துகொண்டிருப்பாள் இது அவளது தினசரி வழக்கம் . ஒரு திரைக்கதையின் மிக...

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....

Image
''உயிரே''   காதல் கதைகள்- பகுதி 1 நான் தேநீர் விரும்பியல்ல. தேநீர் போலவே எனக்கு காதலும்  :) காதலின் இயல்பும் அதீதமும் அரிதாகவே என்னை கவர்ந்திருகின்றன. மணிரத்னம் படங்களில் வெளிப்படும் காதலின் அழகியல் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. மணிரத்னம் படங்களில் காதல் என்பது அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. வசனங்களில் ....காட்சிப்படுத்தலில் .... ஒளிப்பதிவில் ....இசையில் ....வரிகளில் என்று அதன் பிரிவுகள் மட்டுமே மாறிக்கொண்டிருகின்றன. தில்ஸே(உயிரே ) ஏன் இந்த படத்தைப்பற்றி அதிகம் பேசுவதில்லை என்ற கேள்வி அடிக்கடி எழும். உயிரேயின் அரசியல் தவிர்த்து அதன் காதல், அழகிய சிறுகதைகள். முதல் சிறுகதை உலகத்திலேயே மிகவும் சுருக்கமான காதல் கதை இது தான் என்று முடிகிறது. நான் ஆரம்பிக்கிறேன்  :) மணிரத்னம் படங்களில் காதல் களங்கள் எவை ? ரயில்,மழை,காற்று,பரவசம், புன்னகை எல்லாம் இங்கிருக்கிறது. அமர் ஒரு சாதாரண இளைஞன். எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் தீர்வுகளை பற்றி சிந்திக்காதவன். எப்போதும் மகிழ்ச்சியும் தேடலும் ஆர்வமும் கொண்ட இளைஞனின் முகம் அன்றைய ஷாருக்கினுடையது. அசட்டை ந...

சட்டென நனைந்தது நெஞ்சம்

Image
திரைப்பட வகுப்பறை ... ஏதோ ஒரு பேச்சின் நீட்சியில் வந்தது  கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்பட பெயர் அங்கிருந்த அனைவருமே பிடிக்கவில்லை/ பிடித்த படம் என்ற வரையறைக்குள் அடக்கிட முனைந்த தருணம் என் பட்டியல்களில்  கன்னத்தில் முத்தமிட்டால் இல்லை என்றாலும் படத்தில் இடம்பெறும் கிட்டத்தட்ட 14 நிமிஷ காட்சியை அதில் ஒலிக்கும் பாடலை மட்டும் எப்போதும் ரசிக்க தவறாதவள் நான் காதல்- மணிரத்னம் தன் படத்தில் அழகியல்- யதார்த்தம் என்று 2 பக்கங்களையும் இணைக்க முற்பட்ட கட்டம். மாதவன் எழுத்தாளன் எழுத்தின் வழியே அவனை, அவன் அழகை ரசிக்கும் சிம்ரன். ஈர்ப்பு -காதல்- அன்பு என்று எல்லாம் இருவருக்குள்ளும் மெலிதாய் இருக்கும் தருவாயில் குழந்தைக்காக சிம்ரனை திருமணம் செய்ய மாதவன் கேட்க, அது ஏன்? அப்படி ஒரு காரணம் ஏன்? காதலை விட காரணம்தான் தீர்மானித்ததா தன்னை, என்று சிம்ரன் கேட்கும் காட்சி எந்த வார்த்தையுமே அவளை சமாதனப்படுத்த முடியாதென்று உணர்பவன் அவளது கோபத்தை, குழப்பத்தை கட்டியணைத்து தீர்க்க முற்படுகையில் அவளுக்கு சந்தோஷ வார்த்தைகள் கண்ணீராக உருமாறி தெறிக்க முதன் முதலில் அ...

ஸ்பரிசம்

Image
The Handmaiden-சில திரைக்கதைகள் நம் கதையை நியாபகப்படுத்தும் நான் எழுதிய சிறுகதையை நினைவூட்டுகிறது இக்கதையின் ஒரு பகுதி எனக்கு அதிகபட்சம் 15 வயதிருக்கும். அப்பொழுது வெளிப்பாடசாலை சிறுகதைப்போட்டி தலைப்பின் கீழ் எழுதுவது எனக்கு பிடிக்காது அந்த நேர மனநிலையில் ஏதோ ஒன்றை எழுதிவிட்டு 3வதாக இருக்கும் தலைப்பை கதைக்கு சூட்டுவது என் வழக்கம் அன்று விரும்பிய தலைப்பு என்ற அறிவிப்பு எதுவுமே திட்டமிடாத நிலையில் எழுத ஆரம்பிக்கிறேன் கதை -ஸ்பரிசம் இரு பெரிய மரத்தடுப்புக்கள் வழியே சிறு துளை அதில் இருபுறமும் விரல்கள் மெல்ல ஒன்றை ஒன்று பற்றிக்கொள்கின்றன அந்த ஸ்பரிசத்தோடு ஆரம்பிக்கிறது கதை மலையுச்சி, பெரிய மாளிகை காட்டுவழியே வருகிறாள் ஒரு பெண் அவள்அந்த மாளிகைக்கு புதிதாக வரும் பணிப்பெண் அந்த மாளிகையின் எஜமான் பெரும் செல்வந்தன் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே அங்கு வந்து வசிப்பான் அவன் மனைவி பேரழகி இத்தனை தூரத்தில் அவளை பாதுகாக்கவே இந்த மலை அரண்மனை அந்த பேரழகிக்கு எப்போதும் ஓவியங்கள் வரைவதே வேலை எல்லாமே பார்த்து வரையும் ஓவியங்கள் சுய சிந்தையில் அவள் வரைந்ததே இல்லை வெளி உலகம் அறி...

தென்கொரிய திரைப்பட விழா 2016 – இலங்கை

Image
கடந்த 15 வருடங்களாக  தென் கொரிய திரைப்படங்கள் கிழக்கு ஆசியாவை தாண்டி உலகெங்கும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் கடந்த 6ஆண்டுகளில் தென்கொரியத் திரைப்படங்களின் சர்வதேச விற்பனை, மீளாக்கம், திரைப்பட விருதுகளை பெறல், மொழிமாற்றம் செய்யப்படல் என்று அதன் தாக்கம் அதிகம் எனலாம். இலங்கையிலும் தென்கொரிய திரைப்படங்களுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதற்கு சாட்சி கடந்த வருடம்  அரங்கு நிறைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட தென்கொரிய திரைப்பட விழா -2015. இலங்கையில் கடந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழாக்களுள் முக்கியமானது தென்கொரிய திரைப்பட விழா. ரசிகர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்தது எனலாம். ஆரம்பத்திரைப்படமான Harmonyக்கு திரையரங்கம் நிரம்பியது. இறுதியில் படத்தில் லயித்து போனவர்கள் கண்ணீருடன் தான் திரும்பினார்கள். Forever the Moment ரசிகர்களின் ஆதரவை பெற்றதோடு படம் முடிந்த பின்னர் அனைவரும் நீண்ட நேரம் கைதட்டி பாராட்டினார்கள்.                                 அதே போல A Barefoot Dre...

Departures

Image
நம் வாழ்வில் மரணம் என்பது தவிர்க்க முடியாது. நமது வீடுகளிலும் மரணம் நிகழ்ந்திருக்கும். இல்லாவிட்டால்  நிச்சயம் அடுத்தவரின்  மரண வீடுகளுக்கு சென்றிருப்போம் . அப்போதெல்லாம் மரணித்தவர் , அவரின் உறவுகள் துக்க விசாரிப்புக்கள் கண்ணீர் இவை தான் நாம் அறிந்தவை . மரணத்தின் மூலமாக ஜீவியம் நடத்துபவர்களை பற்றி சிந்தித்ததுண்டா ? பிணவறை ஊழியர் , சவப்பெட்டி செய்பவர் ,மின்சார சுடுகாட்டில் பணிபுரிபவர் ,வெட்டியான் , சாவு மேளம் அடிப்பவர் என்று தொடரும் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் பலரின் மரணத்தை தரிசிகின்றார்கள் .அவர்களது வாழ்வில் மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்  என்ன ? சமுகத்தில் அவர்களை எப்படி பார்கிறார்கள் ? புறக்கணிப்பும் வெறுமையும் அருவருப்பும் கடந்து அவர்களால் இயல்பாக வாழ முடியுமா ? இப்படி என்னை சிந்திக்க வைத்த ,அழ வைத்த ஜப்பானிய  திரைப்படம் தான்  Departures இசைக்கச்சேரிகள், அன்பு மனைவி என்று சந்தோஷமாக வாழ்கிறான் டைகோ( Daigo Kobayashi) . ஒருநாள்- அவனுடைய ஆர்கெஸ்ட்ரா கலைக்கப்படுகிறது. வேலைபோய் விட்ட கவலைக்கு உள்ளாகிறான். மிகுந்த தயக்கத்தோடு மனைவியிடம் தன...

Balut Country

Image
கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் Balut Country படம் முடிந்த பின்னர் நடந்த கலந்துரையாடல் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது . கலந்துரையாடலின் போது இயக்குனரிடம் ''உங்கள் படம் மெதுவாக உள்ளது; திரைப்படங்களை மெதுவாக எடுக்ககூடாது சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் ''என்று ஆரம்பித்து ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற ரீதியில்  வகுப்பெடுக்க ஆரம்பித்தார் ஒருவர். இயக்குனர் Paul Sta. Ana சிரித்துக்கொண்டே'' இது மெலோ டிராமா வகையை சேர்ந்த படம் .அத்தோடு காட்சிகளை மிக மெதுவாக அமைத்ததன் காரணம் அந்த கதாபாத்திரத்தின் இருப்பையும் இயல்பையும் உணர்த்ததான் ....'' என்று சொல்லி விளக்க முற்பட்டும் அது முடியவில்லை. ஒரு கட்டத்தில் ''உங்களுக்கு பொழுது போக்கை ஏற்படுத்துவதற்கு, நான் பாலிவுட் படம் எடுக்கவில்லை; அதேவேளை நான் மோசமான படமும் எடுக்கவில்லை'' என்று முடித்துகொண்டார் . அரங்கை விட்டு வெளியே வந்த பின்னர் இயக்குனரை சந்தித்தேன். ''மெதுவாக நகர்வதாக பலர் சொன்னார்கள். எனக்கு அப்படி தெரியவில்லை காரணம் நான் இதைவிட மெதுவாக நகரும் படங்களை பார்த்துள்ளேன் .......