தென்கொரிய திரைப்பட விழா 2016 – இலங்கை


கடந்த 15 வருடங்களாக  தென் கொரிய திரைப்படங்கள் கிழக்கு ஆசியாவை தாண்டி உலகெங்கும் வரவேற்பை பெற்று வருகின்றன.
அதிலும் கடந்த 6ஆண்டுகளில் தென்கொரியத் திரைப்படங்களின் சர்வதேச விற்பனை, மீளாக்கம், திரைப்பட விருதுகளை பெறல், மொழிமாற்றம் செய்யப்படல் என்று அதன் தாக்கம் அதிகம் எனலாம்.
இலங்கையிலும் தென்கொரிய திரைப்படங்களுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதற்கு சாட்சி கடந்த வருடம்  அரங்கு நிறைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட தென்கொரிய திரைப்பட விழா -2015.
இலங்கையில் கடந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழாக்களுள் முக்கியமானது தென்கொரிய திரைப்பட விழா. ரசிகர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்தது எனலாம். ஆரம்பத்திரைப்படமான Harmonyக்கு திரையரங்கம் நிரம்பியது. இறுதியில் படத்தில் லயித்து போனவர்கள் கண்ணீருடன் தான் திரும்பினார்கள்.
Forever the Moment ரசிகர்களின் ஆதரவை பெற்றதோடு படம் முடிந்த பின்னர் அனைவரும் நீண்ட நேரம் கைதட்டி பாராட்டினார்கள்.                                 அதே போல A Barefoot Dream,200 Pounds Beauty, The King and the Clown, Scandal Makers திரையிட்ட அனைத்து படங்களும் ரசிகர்களை மகிழ்வித்தது.
இந்த முறையும் இலங்கைக்கான  தென் கொரிய தூதரங்கமும் Korea Foundationம் இணைந்து தென் கொரிய திரைப்படவிழாவை ஒழுங்கு செய்துள்ளது.
இம்முறை 4 திரைப்படங்களை ஆங்கில உபதலைப்புக்களுடன் தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தில்  இலவசமாக திரையிடப்படவுள்ளன.

Comments

Popular posts from this blog

86வது ஆஸ்கார் விருதுவழங்கும் விழா