Posts

Image
பரவல் பற்றிப்பிடிக்கும் உன் கொடிய கரங்கள் காயப்படுத்துகிறது என் தேகத்தை படரும் உன் வேதனை தரும் ஸ்பரிசம் என் பவித்ரங்களை உடைக்கிறது மெல்ல மெல்ல பாவக்குழிகளில் என்னை அமிழ்த்தி ரசிக்கிறாய் வலிகள் தாளாது அன்பை அறுத்து அழும் போது உன் குரோதக்கண்களின் புன்னகை விரிகிறது கூரிய பற்களின் பிடியில் தவிக்கிறேன் நான் உன்னை தவிர்க்கவும் தடுக்கவும் திராணியற்று விழுகின்றேன் நித்தமும் உனக்குள்ளேயே ...

தனிமையின் நிழல்

Image
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் சித்தம் கரைக்கும் இசை...அழகு வரிகள்... கண்களை விட்டு அகலாத காட்சிகள்...இப்படி எதுவுமே இல்லாத இந்தபாடல் என்னுள் நிலைபெற்றது ஏன் என்றால் இப்பாடலில் இயல்பாய் வெளிப்படும் தனிமை தான் காரணம். தனிமை வெளிகளில் தன்னம்பிக்கையுடன் வாழ்வியலை எதிர்கொள்ளும் பெண்ணின் பாடல் இது! வரிகளில் வெளிப்படும் தனிமையை பாம்பே ஜெயஸ்ரீயின் அழுத்தமான குரல்,அழகாய் வெளிப்படுத்துகின்றது.கேட்கும் போதே மௌனவெளியில் ஒலிப்பதை போன்ற நினைவு... மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் அவசரம் எதுவுமே இன்று இல்லை ஒய்வெடுங்கள் தென்றல் தோழனை அழைத்து வந்து தேனீர் விருந்து கொடுத்து விட்டு வம்பு செய்தீர்கள் சுவைத்துக் கொண்டு சிரித்து முறைத்து விருப்பம் போல வாழ மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் அவசரம் எதுவுமே இன்று இல்லை ஒய்வெடுங்கள் மலர்களை நிம்மதியாக உறங்கசொல்பவள் அதன் சுகந்திரம் பற்றியும் உரிமை பற்றியும் உணர்த்துகிறாள். பூக்களின் அழகை மட்டுமே பாடும் உலகில் அதன் உரிமை பற்றி பாடும் பாடல் பெண் சிந்தனைகளின் மறுவடி...
Image
நட்பு... செல்லமாய் சண்டை போட்டுக்கொள்ளும் நண்பர்களை பார்த்து வருத்தமாய் இருந்தாலும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது இப்படி உரிமையுடன் சண்டை போட நல்ல நண்பர்கள் இல்லையே என்று!
Image
சிறகின் வலி ... தனிமை வெளிகளில் அதிகரிக்கும் வான் தொட்டு விளையாடும் என் சிறகுகளின் ஆசை! சிறகில் பிணைக்கப்பட்ட என் கூடுகள் சிறைப்போலவே... வெண்சிறகிற்குள் ஒளிந்திருக்கும் கருமையும் கண்ணீரும் படர்ந்த கனவுகள் கரைக்கமுடியாமல் கடக்கிறது காலஓடைகள் என் சிறகுகள் உருவில் சிலுவைகள் இது வரமாய் பெற்ற சாபம் ! இருக்கவும் மனமற்று பறக்கவும் வழியற்று வாழ்கிறேன் நானும் உன்னைப் போலவே ...
Image
ஒற்றைக்கனவு நெடு நாளாய் தொடரும் ஒற்றைக் கனவு மழையிரவில் சிவப்புகுடையில் நான் அடைமழையில் என் முகம் பார்க்க குடைக்குள்ளே எட்டிப் பார்க்கும் மழைத்துளிகள் கடந்து போகும் சாலையில் பெயர் தெரியாத பூக்களின் வாசம். மழையை விட குளிர்வித்தது எதிர்படும் மனிதர்கள் அதிசயமாய் சிந்திய புன்னகை! பூமி குளிர்ந்து மழைநீர் வழிய பாதம் தடுமாறும் நடையில் மெல்ல நகர்கிறேன் எங்கு செல்கிறேன் என்று தெரியாமல் பாதைகள் முடியாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது அந்த மழைப்பயணம் முழுவதும்! இப்படி நெடு நாளாய் தொடரும் இந்த ஒற்றைக் கனவு அர்த்தம் புரியாவிட்டாலும் அழகாய் தொடரும் கனவுக்காக விழிக்க மறுக்கிறேன் நான்!!!
Image
மகளிர் தினம்...! பகிரப்படாத பகிரமுடியாத பகிர விரும்பாத விடயங்கள் இன்னும் இருக்கின்றன என்னிடம் இந்த மகளிர் தினத்தைப் போலவே ...
Image
தொலை நிலா அடர் இருளில் பேரெழில் நிலவு   வேட்டையும் வேட்கையுமாய் நகரும் பொழுது தொலைதூர எல்லைகள் வழியே பிரிபடாத மாயக் கயிறுகளால் நிகழ் உலக மாயை மனது கட்டுண்ட தருணம் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நிலவில் கரையும் இருளாய் விரும்பித் தொலைகிறேன் நான் !!!