The Red Balloon சிறு வயதில் பலூன்கள் மேல் எனக்கு அளவிடமுடியாத ஆசை இருந்தது. அதே ஆசை இன்று இருக்கிறதா என்றால் பதில் சொல்லத்தெரியவில்லை பலூன்களைப்பார்க்கும் போது ஒரு இனம்புரியாத ஆர்வம் ஏற்பட்டாலும் நான் ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லை என்ற எண்ணம் வர அடுத்த நிமிஷம் ஆர்வம் குன்றிப்போய் விடும் பாலூன்களோடு சேர்த்து எனது சிறு பராயமும் தொலைந்துவிட்டது. தொலைந்து போன நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்தது ஒரு குறும்படம் "The Red Balloon" பள்ளிக்கு செல்லும் ஒரு சிறுவன் மின் கம்பத்தில் சிக்கிகொண்டிருக்கும் ஒரு பலூனை காண்கிறான் சிவப்பு நிறத்தில் பெரிதாய் இருக்கும் அந்த பலூனை பார்க்க எனக்கே ஆசை வருகிறது என்றால் , அந்த சிறுவனுக்கு ஆசை வராமலா இருக்கும் ? பலூனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு செல்ல தொடங்குகிறான். பலூனோடு வரும் சிறுவனை பேருந்தில் ஏற்ற மறுக்கிறார் நடத்துனர் . பலூனை பிரிய மனமில்லாத சிறுவனும் பலூனை எடுத்துக்கொண்டு ஓடத்தொடங்குகின்றான் . பலூனை பள்ளியின் உள்ளே எடுத்து செல்ல முடியாத காரணத்தால் பள்ளிப்பணியாளரிடம் ஒப்பட...
Popular posts from this blog
Traveling on one leg
எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தரவுகளோ தகவல்களோ தெரியாமல் பார்க்கின்ற திரைப்படங்கள் நம்மை நெருங்கி மனதில் ஆழ ஊடுருவி நுழைவது ரசனையான அனுபவம். Traveling on one leg சமிபத்தில் அத்தகைய நுண் அனுபவத்தை தந்த திரைப்படம். 1985 இல் ரோமானியா -ஜேர்மனி இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியாக பிரிந்த நேரத்தில் தன் இழந்த காதலை தேடி புறப்படும் பெண்ணின் அக உணர்வுகளை படம் சித்தரிக்கின்றது. இந்தப்படத்தை Avant-Garde படங்களின் காட்சிமுறை இப்படிதானே என்ற எண்ணத்தோடு கடந்து விட முடியாது. புற அழுத்தங்களால் சிதைவுறும் அக உலகத்தை காட்சிப்படுத்தல் அத்தனை எளிதல்ல. மனிதருக்கு மனிதர் சிந்தனை என்பது முற்றிலும் மாறுபட்டது. நாடுகளுக்கு எல்லை கோடுகள் போட்டு பிரித்துவிடலாம். மனித மன ஓட்டங்களை எந்த வேலி கொண்டும் தடுத்துவிட முடியாது . காதலும் ஏக்கமும் காமம் சார்ந்து மட்டுமே பயணிக்கும் என்ற ஒருதளப்பார்வை ஆழமற்றது. அன்பையும் பற்றுதலையும் தேடி அலைகின்ற மனம் அதற்குள்ளே தனது அடையாளத்தையும் தேடிக் கொண்டே இருக்கும். எதை நாம் அதிகம் நேசிக்கின்றோமே அதையே அதிகம் வெறுக்கவும் விலகவும...
ரகசியம்
ஏன் இத்தனை பயம் கொள்ளச் செய்கிறது இந்த உடல் .... உஷ்ணம் விரவிப் பரவி கருகச் செய்யும் கணத்தில் நீர் ஊற்றி ஊற்றி அணைத்து தடுக்கிறேன் ஏனோ அதிகதிகமாக ஒளிகின்றேன் எதிலோ நகர நகர உதிர்ந்து விழுகின்றது உடல் அதில் உடைந்து தெறிக்கிறது நான் எனும் நான் சிதறிய கூறுகளை சேகரித்து இணைக்கின்றேன் ஒட்டப்பட்ட உதிர்வுகளின் விரிசல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்றே வெவ்வேறு வண்ணங்களை படரச்செய்கின்றேன். அடர் வண்ணங்களில் விரிசல்கள் தெரியவில்லை மகிழ்ச்சி இதுவரை ... ஆனால் யாரும் பார்த்தால் ??? உற்றுப்பார்க்கும் கண்களின் ஊடுருவலில் ரகசியம் தெரிந்தால் ? என்செய்வேன் ?

Comments
Post a Comment