Posts

Paths of the Soul - ஆன்மாவின் யாத்திரை

Image
ஆன்மிகம் என்பது உள்ளார்ந்த ரீதியாக உணரப்படும் அமைதிநிலை. சிலை வழிபாடுகள், சடங்குகள், மத போதைனைகள் என்பன ஆன்மிகம் அல்ல. மதங்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி இயங்குகையில் ஆன்மிக அனுபவம் நிகழ்வதில்லை. நம் எண்ணங்களினால் செயல்களில் வெளிப்படும் அமைதியே நமக்குள் நிலவும் ஆன்மிகத்தை புலப்படுத்தும். அத்தகைய ஆன்மிக யாத்திரையில் உணர்த்தப்படும் நம்பிக்கை ஒளியை திரையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் தான் Paths of the Soul . திபெத் நாட்டின் சிறியதொரு கிராமத்தை சேர்ந்த சிலர், தலைநகரிலுள்ள Lhasa வுக்கு, 1,200 மைல்கள் தரையில் வீழ்ந்து வணங்கியபடியே நடைபயணமாக மேற்கொள்ளும் ஆன்மிக யாத்திரையூடாக, அவர்களது அன்பு, பொறுமை, அமைதி, வாழ்வியல் அணுகுமுறை என்பவற்றில் வெளிப்படுத்தப்படும் ஆன்மிக உணர்வுவை இந்த ஆவணப்படம் பதிவுசெய்கின்றது. இந்த பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட தேவையும் காரணமும் இருக்கின்றது. குடும்பத்தின் தீவினைகள் நீங்க , விலங்குகளை கொன்ற பாவம் தீர்க்க, வாழ்வில் இறுதி அமைதியை நோக்கி என்று பல எண்ணப்பாடுகளுடன் ஒன்றாக பயணிக்கும் இவர்களது பலவருட பயணத்தின் வழியாக வாழ்...

BARONESA

Image
ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் பெண்களின் உலகமும் பெண்களின் பார்வையில் வெளிப்படுத்தப்படும் பெண்களின் உலகமும் மாறுப்பட்டவை. இயக்குனரின் பாலின அடையாளத்தில் முரண்கள் வெளிப்படுவதில்லை. படைப்பில் வெளிப்படும்  நுணுக்கமான அணுகுமுறையிலேயே பெண்களின் படைப்புலகம் உயிர்ப்படைகின்றது. அதில் ஆவணப்படங்களின் தாக்கம் தனித்துவமானது. அந்தவகையில் பலதரப்பட்ட சினிமாக்களை பார்த்தாலும் உலகளாவிய ரீதியில் வெளியாகும் ஆவணப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி கேள்விகளையும் குழப்பங்களையும் விட்டுச்செல்கின்றன. சமிபத்தில் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய ஆவணப்படம் Baronesa . 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பிரேசில் நாட்டு ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் Juliana Antunes. சேரிப்புறத்தில் வாழும் Andreia, அந்த சூழலில் வாழ விரும்பாமல் அங்கிருந்து வெளியேற எண்ணுகின்றாள். எங்கிருந்தோ வந்து, அங்கு குடியேறிய Leid, சிறைக்கு சென்ற கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் அங்கே தங்கி வாழ்கிறாள். போதைப்பொருள் கும்பல்,குண்டர் கும்பல் சண்டைகளில் தப்பித்து வறுமையை மீறி வாழும் இருவரது வாழ்க்கை நிகழ்வுகளை நேரடி...

அதிகாரத்தின் இழைகள்

Image
The Experiment    வன்முறை - குற்றமாக பார்க்கப்படும் உலகில், அரச வன்முறையை குற்றமாக அடையாளப்படுத்த முடியாமல் மௌனித்து வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும் மனித அவலம் தொடர்ந்து நிகழ்கின்றது. ‘அரச வன்முறை’ என்பதை வெறும் வார்த்தையாக கடந்து விடமுடியாது; பலகோடி உயிர்களின் ரத்தபலியில் பதிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வெற்றிகளை உள்ளடக்க முயலும் கடவுச்சொல்லாகவே கருதுகின்றேன். இந்த அரச வன்முறையின் ஆரம்பத்தை ஆராய்வோமானால் ‘அதிகாரம்’ என்பதே மையப்புள்ளியாக தென்படுகின்றது. அதிகாரத்தை நிலை நாட்டவே வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. அதிகாரத்தை எதிர்க்கவே போராட்டம் பிறக்கிறது. அரச வன்முறை நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில குரல்களும் கேள்விகளும் தொடர்ந்து ஒலித்தவண்ணம் உள்ளன. ‘’பிற மனிதனிடம் வன்முறையை பிரயோகிப்பவன் நல்லவனா? மனிதாபிமானமே இல்லையா? இந்த உலகம் ஏன் இப்படி இயங்குகின்றது?.....’’   மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வகைப்பாடு எல்லாம் இல்லவே இல்லை. மனிதனின் அடிப்படை உளவியலை குறுக்குவெட்டுப்பார்வைக்கு உட்படுத்தும் போதுதான் மனிதாபிமானம் எனும் கற்பிதம் உடைபடுகின்...

The Red Turtle

Image
சினிமாவில் அனிமேஷன் படங்களின் உருவாக்கம் ஆரம்பித்த காலப்பகுதியில், ‘’அனிமேஷன் படங்கள் Live action படங்களைப் போல உயிர்ப்புடன் கூடிய படைப்பாக திகழமுடியாது ; இங்கே மனித கூட்டிணைவுடன் உருவாகும் சினிமா , அங்கே தொழில்நுட்பத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தப்படுகின்றது . எக்காலத்திலும் Live action படங்களை அனிமேஷன் படங்களினால் நெருங்கவே முடியாது '' என்ற கூற்றுக்கள் முன்மொழியப்பட்டன . ஆரம்பகாலத்தில் Live action சினிமாக்களோடு ஒப்பிட்டு அனிமேஷன் திரைப்படத்தின் குறையாக அதன் கற்பனை படைப்புலகம்   முத்திரை குத்தப்பட்டது.   கற்பனை திறனென்பது கற்றுகொடுக்க முடியாத தனித்துவமான அம்சம் ; எல்லைகளும் கேள்விகளுமற்ற கற்பனை படைப்புலகத்தை தனது பலமாகவும் தன் அடிப்படை மூலதனமாகவும்   மாற்றிக்கொண்டு , அனிமேஷன்துறை செயற்பட்டதன் விளைவு, காலம் அக்கூற்றுகளை பொய்யாக்கியதோடு, அனிமேஷன் படத்துறை பல பரிணாமங்களை கடந்து சினிமாவின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கின்ற சக்தியாகிவிட்டதை நாம் அவதானிக்க முடியும். அனிமேஷனில் சாத்தியப்படுத்தப்படும் உயிர்ப்பினை Live action படங்களில் கொண்டுவர முடியாது என்று கருதுகின...

Traveling on one leg

Image
எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தரவுகளோ தகவல்களோ  தெரியாமல் பார்க்கின்ற திரைப்படங்கள் நம்மை நெருங்கி மனதில் ஆழ ஊடுருவி நுழைவது ரசனையான அனுபவம். Traveling on one leg சமிபத்தில் அத்தகைய நுண் அனுபவத்தை தந்த திரைப்படம். 1985 இல் ரோமானியா -ஜேர்மனி இரண்டு நாடுகளும்  அரசியல் ரீதியாக பிரிந்த நேரத்தில் தன் இழந்த காதலை தேடி புறப்படும் பெண்ணின் அக உணர்வுகளை படம் சித்தரிக்கின்றது.   இந்தப்படத்தை Avant-Garde படங்களின் காட்சிமுறை இப்படிதானே  என்ற எண்ணத்தோடு கடந்து விட முடியாது. புற அழுத்தங்களால் சிதைவுறும் அக உலகத்தை காட்சிப்படுத்தல் அத்தனை எளிதல்ல. மனிதருக்கு மனிதர் சிந்தனை என்பது முற்றிலும் மாறுபட்டது. நாடுகளுக்கு எல்லை கோடுகள் போட்டு பிரித்துவிடலாம். மனித மன ஓட்டங்களை எந்த வேலி கொண்டும் தடுத்துவிட முடியாது . காதலும் ஏக்கமும் காமம் சார்ந்து மட்டுமே பயணிக்கும் என்ற ஒருதளப்பார்வை ஆழமற்றது. அன்பையும் பற்றுதலையும் தேடி அலைகின்ற மனம் அதற்குள்ளே தனது அடையாளத்தையும் தேடிக் கொண்டே இருக்கும். எதை நாம் அதிகம் நேசிக்கின்றோமே அதையே அதிகம் வெறுக்கவும் விலகவும...

Fast Film

Image
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொள்ள / கடத்தப்பட , கதாநாயகன் எதிரிகளை மீறி அவளை காப்பாற்றி இறுதியில் இருவரும் இணைதல் என்பது , காலம் காலமாக நாம் பார்த்துவரும் சினிமாக்களின் உள்ளடக்கம்.   இந்த ஒரே உள்ளடக்கத்தை ஒரே மாதிரியாக நாங்களும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். Fast Film படத்திலும் இதே உள்ளடக்கம் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கின்றது. லைவ் ஆக்ஷன் சினிமாக்களை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம் என்பதே அழகியல் முரண். மௌன யுகத்திலிருந்து ஹாலிவுட் கோல்டன் யுகம் வரையான ,   முக்கியமான 300 படங்களிலிருந்து 65,000 படங்களைகொண்டு படைக்கப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளராக, சிறந்த வாசகராக இருத்தல் வேண்டும் என்பார்கள். அதே போல திரைப்படங்களின் தீவிர ரசிகர்களுக்கு, அந்த ஆத்ம ரசனையே நல்ல படைப்புக்களை கொடுக்க உதவும் என்பதற்கு இந்த படமும் நல்ல உதாரணம். இதுவரை நாங்கள் ஹாலிவுட்டில் பார்த்து ரசித்த ஷாட்கள் , நடிகர் நடிகையர் மற்றும் ஒலி என்பவற்றை ஒரே படத்தில் பார்க்க கிட்டியமை கிளாசிக் ரசிகர்களுக்கு அருமையான திரைவிருந்து. அதிலும் படத்தில் இடம்பெறும் சேசிங் காட்சி ...

கலை சினிமா vs கமர்ஷியல் சினிமா

Image
கலை சினிமா vs கமர்ஷியல் சினிமா கடந்த வருட இறுதியில் 7வது சார்க் திரைப்படவிழாவின் Materclass நடைபெற்றபோது, முக்கியமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அவற்றில் 2 முக்கியமான கேள்விகளையும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களினால் பெற்ற புரிதல்களையும் இங்கு பகிர்கின்றேன். உலகம் முழுக்க சில கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டும், பதில்கள் சொல்லப்பட்டுக் கொண்டுமிருப்பது வழக்கம். அத்தகைய  சினிமா தொடர்பான கேள்விகளில் Masterclass, Workshop, Lab என்று சகல இடங்களிலும் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று...  ‘கலைப்படங்களா... கமர்ஷியல் படங்களா... சிறப்பானவை? எதனை நோக்கி நம் பயணமும் பார்வையும் அமையவேண்டும்?’ என்ற கேள்வியாகும். இதற்கு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு இடங்களில் பலவிதமான பதில்களை கொடுத்திருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்ற மிக சுருக்கமான தெளிவான பதிலாக  Griffith Film Schoolபேராசிரியரான Anne Démy-Geroe  கூறிய பதிலை எழுதுகின்றேன். Q1 பார்வையாளர் : "Crouching tiger, Hidden dragon ஒரு கமர்சியல் படம்... இந்த கலைத்தன்மையற்ற போலியான படைப்பை எங்களால் முழுவதுமாக பார்க்கவே முடிய...